கவிதை திருவிழா- முதிர்வினில் மகிழ்வைத்தேடி

முதிர்வினில் மகிழ்வைத் தேடி


மறைந்து தொலைந்து போன இன்பம்
அறியாத தவறினில், பிழைத்துப் போன வழியினில்
தொலைந்த தேடல் திரும்பியழைத்ததால்
ஆவல் கொண்டு மகிழ்ந்து போய்
இல்லா பசுமை தேடி, வறட்சி துணை கொண்டு
கடையெல்லை காணாமலே
செதுக்கி செல்லும் தூரம்
பதுங்கி நகரும் காலம்
நெருங்கிவிட்டதாய் நினைத்துருகுகையில்
நிலையில்லா மேகமாய், தேடல் கலைந்து போக
பின் சென்று கறுகிட மறுத்து
இல்லா இன்பம் தேடி, முன் சென்ற மனம்
மெல்லத்தான் உணர்கின்றது எல்லாம் மாயையென்று
விரிந்த உலகமாய் மனம் கொண்டோருக்கு
குழந்தையின் கை பொம்மையாய்
புத்தகத்தின் சிறு வரியாக
சற்றே இளைப்பாறும் ஓய்விடமாய் மாறிப்போனேனோ !
பதறி, கலைந்து தொலைந்தாலும்
விதியென்று உளம் தெளிய
முனைக்கின்றது மனம், முதிர்வினில் மகிழ்வினைத் தேடி …….

எழுதியவர் : கிறிஸ்டாஅறிவு (11-Sep-17, 2:20 pm)
சேர்த்தது : christaarivu
பார்வை : 74

மேலே