ஆசை

இங்கு
மரணத்தை
நெருங்கி கொண்டிருந்தால்
அவர்களின்
கடைசி ஆசை கேட்கப்படும் ...
குற்றவாளியான
தூக்கு கைதியின்
கடைசி ஆசையும் நிறைவேற்றப்படும் ...
ஆனால்,
நீ என்னை பிரிய நினைக்கையில்
நம் உறவை முடித்து கொள்ள
துணிந்த பின் ...
என் கடைசி ஆசையை கூட
உன்னால் கேட்க முடியவில்லை .....
ஏன் என்று விளங்காமல் இல்லை
என் அன்பே...
நீ வேண்டும் ,
உன்னோடு வாழ வேண்டும்
என்று கேட்டு விடுவேனோ
என அஞ்சுவது புரியாமல் இல்லை..
என் முதல் ஆசை புரிந்தால் தானே ,
என் கடைசி ஆசையை கேட்பாய் ...
என்னை நேசித்த மறுத்த
என் காதலிக்காக ,
என் எல்லா
ஆசைகளையும் .........
நினைவுகளையும் .........
நிகழ்க்காலத்தையும் .......
ஒவ்வொரு நொடியும்
கொன்று குவிக்கிறேன்
என்னுள் அவளாக ................

எழுதியவர் : சுபா பிரபு (11-Sep-17, 2:52 pm)
Tanglish : aasai
பார்வை : 307

மேலே