இது ஒரு காதல் கதை

சாலையில் நடந்து செல்கையில்
எதிரினில் வந்தாள் வானதி...
காதோடு இசை கேட்டு சென்றதால்
கண் பார்க்கவில்லை அவளை...
கையினில் மீன்தொட்டியோடு வந்து கொண்டிருந்த அவளை
தெரியாமல் இடிக்க .
தவரும் மீன்தொட்டியை வானதி பிடிக்க...
வானதியை அருண்மொழி பிடித்துக்கொண்டான்.
வானதி அவனை முறைத்தபடி வெளிப்பட்டு.அங்கிருந்து நடக்கலானாள்.

சிறுவயதில் இருந்தே
வானதியும் அருண்மொழியும்
எலியும் பூனையும் போல் பார்த்துக்கொள்ளும் பொழுதெல்லாம் முறைத்துக்கொள்வார்கள்.
அதற்கு ஒரு காரணம் உண்டு.அவர்கள் இருவரின் அம்மாக்களும்...அப்பாக்களும் நல்ல நண்பர்கள் தான்.
இவர்களும் தான்.அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்.

ஒரு நாள் விளையாடும் பொழுது
வானதியின் தோழி மாங்காய் அடிப்பதற்கு குறி வைத்து அது தெரியாமல் அருண்மொழியை தாக்க
மண்டை உடைந்து நிறைய ரத்தம் போய்விட்டது.
வானதியும் அந்நேரம் குறிவைத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாது.
அருணும் அவனுடைய நண்பர்களும்
பார்க்கும் பொழுது .வானதி மட்டுமே அங்கிருந்தாள்.
வானதி தான் தன்னை அடித்துவிட்டாள் என்று ஏற்றிவிட.
வலியின் மிகுதியில் இருந்த அருணும் யோசிக்காமல்
வானதியை பார்த்து அதே கல்லால்
குறி வைத்து அடிக்க.
வானதியின் மண்டை உடைந்து
ரத்தம் நிற்காமல் ஊற்றியது.
வானதி கடைசியாக
அருண்மொழியின் சிரித்த முகத்தை பார்த்தபடி மயங்கிவிட்டாள்.

அன்றில் இருந்து தான்
இருவரும்
ஆடு புலி போல் ஆனார்கள்.
வானதிக்கு பின்பு தான் தெரியும்.
தன் தோழி தான் அருண்மொழியின் மண்டையை தெரியாமல் உடைத்தாள் என்று.
அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை...
அருண்மொழியும் வானதி தான் மண்டையை உடைத்தாள் என்று இருந்துவிட்டான்.

அருண்மொழி
வானதி இருவரும் நல்லவர்கள்.

வானதிக்கும்
அருண்மொழிக்கும் திருமண வயது வந்துவிட்டது.
இருவரின் வீட்டாரும்
அருண்மொழிக்கு வானதி சிறந்த மனைவியாக இருப்பாள்.
வானதிக்கு அருண்மொழி சரியான துணை என்றும் மனதில் கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஒரு சுபயோக நாளில் இரு வீட்டாரும்
பேசி பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டார்கள்.
அருண்மொழியும்
வானதியும் எவ்வளவு சொல்லியும் அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
ஹா ஹா...சின்னவயசுல நடந்ததெல்லாம் ஒரு விடயம்னு சொல்றீங்க.என்று சப்பென்று ஆக்கிவிட்டார்கள்.

இருவருக்கும் திருமண நாளும் இன்னும் இரண்டு வாரங்களில் ஆனால்
இதுவரை ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டதில்லை.
கல்யாண பத்திரிக்கை தன் தோழிகளுக்கு வைப்பதற்காக வானதி சென்று கொண்டிருந்தாள்.
முன்னால் பார்த்தால் அருணும் அவனுடைய நண்பர்களுக்கு வைப்பதற்காக செல்ல .
பேருந்து இருவரையும் கடந்து நிற்காமல் சென்றது அருண் ஓடிச்சென்று ஏற முற்பட கால் வழுக்கி கீழே விழ
அதை பார்த்த நொடிப்பொழுதில்
அருண் என்று கத்திக்கொண்டே ஓடிவந்து அருணை தூக்கி மடியில் வைத்து
ஆட்டோ என்று கூப்பிடுகிறாள்.
ஆட்டோ வந்ததும்
ஆட்டோவில் அருணை மடியில் சுமந்தபடி சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போங்கண்ணா என்று பதறுகிறாள்..
அருண் ஆனந்த கண்ணீர் சிந்த
அதை பார்த்தவள்.
கண்ணீரை துடைத்துவிட்டு.
அருணின் கையை கோர்த்துக்கொண்டாள்.

அருணை ஆட்டோவில் இருந்து தன் மார்போடு அணைத்து தாங்கி பிடித்தபடி .உள்ளே சென்று .உடனே அடிபட்டதை சொல்ல.
அடிபட்டவர் யார் உங்களுக்கு என்று கேட்க.உடனே என் கணவர் என்று சொல்லி முடித்ததும்.உள்ளே அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டு .முதலுதவி நடக்க.உடனே ஓ பாசிட்டிவ் ரத்தம் வேணும் என்று டாக்டர் சொல்ல.என் ரத்தமும் ஓ பாசிட்டிவ் தான் டாக்டர் என்று சொல்ல.உடனே ஆபரேஷன் தியேட்டரில் அருணுக்கு அருகில் இன்னொரு பெட்டில் வானதியை படுக்க வைத்து .வானதியின் உடம்பில் இருந்து அருணுக்கு ரத்தம் சென்று கொண்டிருந்தது.அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி...
அருண் அரை மயக்கத்தில்
வானதியை பார்த்துக்கொண்டிருந்தான்.
வானதி மனதுக்குள்
அவருக்கு வலிக்கக்கூடாது சீக்கிரம் காயம் ஆறிட வேண்டும் என்று இயற்கையிடம் வேண்டிக்கொண்டாள்.
ரத்தம் கொடுத்து முடித்தவுடன் அவர் எழும்பியதும் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள்.
அவள் அருகிலேயே அமர்ந்து அருணை பார்த்தபடி இருந்தாள்.
அந்த சிறுவயது அருண்
வானதியின் கண்ணில் சிரித்தான்.
வானதிக்கு கூட்டான்சோறு ஆக்கி ஊட்டிவிட்ட...வானதியோடு கண்ணாமூச்சி ஆடிய...வானதியோடு விளையாடிய...வானதியின் காய்ச்சலுக்கு மருந்திட்ட அந்த அருணை கண்டாள்.அந்த அருணை பார்த்து வெட்கத்தில் சிரித்தாள். அதில் அருண் மீது வானதி கொண்ட காதலும் வெளிப்பட்டது.
அருணின் விரலை பற்றியபடி
இனி வாழ்வின் எல்லா நொடிகளிலும் உன்னோடு இருப்பேன் அருண்.என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.அருணின் தலையை மெதுவாக வருடினாள்.
அதில் அருணின் தலையில் இருந்த தழும்பை கண்டு அருணுக்கு மிகவும் வலித்திருக்கும் என்று புலம்பிக்கொண்டாள்.
அன்று அவள் மயங்கும் பொழுதும்
அருணுக்கு ஏன் இவ்வளவு ரத்தம் வருகிறது என்று அருணை நினைத்துக்கொண்டே மயங்கினாள்.
அருணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அருண் கண் விழித்து வானதியையே பார்த்தான்.

என்னோடு உன்னை சேர்த்து
கண்ணோடு என்னை கண்டேன்...
காதலால் கண்ட பார்வையா...
கையினுள் சேருவாயா...
என்று இரு கண்களும் பேசிக்கொள்ள...
அருணை பிடித்து கொண்டிருந்த கையை
அருணுக்காய் எடுக்க முற்பட
அருண் கையை பிடித்துக்கொண்டான்.அந்த ஸ்பரிசம் வானதியை ஏதேதோ செய்தது.
அருணும் வானதியும் ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
இருவரும்...ஒருவருக்காகத் தான் இன்னொருவர் ...சென்ம சென்மமாக பிறந்திருக்கிறோம் என்று உணரத்தொடங்கினார்கள்.

எக்ஸ்க்யூஸ்மீ
நீங்கள் போகலாம்.
மிஸ்ஸஸ் அருண்மொழி .
இந்த மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு கொடுங்க.
பில் இந்தாங்க.
வானதி பணத்தை எடுக்க.
வானதி நான் பணத்தை தருகிறேன் என்று அருண் சொல்ல.
அருண் எனக்கென்றால் நீ செய்யமாட்டீயா.உள்ளே வை.
சார் உங்க மனைவி தானே தராங்க.தரட்டும்.
வானதி பணத்தை கொடுத்துவிட்டு
அருண் உன்னால் நடக்க முடியுமா...
நடக்க முடியும் டி.
அந்த டி யை மிகவும் ரசித்தாள் வானதி.

என்ன டி யா...
என்று செல்லமாக கேட்க.
பின்ன என் மனைவியை நான் டி போடாமா.
யார் போடுவா என் பொண்டாட்டி...

என்னால நடக்க முடியலன்னா தூக்கிட்டா போக போற வானதி.
இல்ல பிளைட் விடப்போறீயா...


ஏன் நான் உன்ன தூக்க மாட்டனா..
இப்ப தூக்கறன் பாரு.
வேணாம் நான் இந்த ரிஸ்க் எடுக்க விரும்பல .நீ என்ன கீழ போட்ருவ.

என் மீது நம்பிக்கை இல்லையா...
உனக்காக பிளைட் விட்றது என்ன.
என் உயிரையே விடுவேன்.

எந்த சினிமா டையலாக் இது.
போடா லூசு...
உங்கிட்ட போய் பாசமா பேசினேன் பாரு.ட்யூப் லைட்...

போடி எள்ளுருண்டை...
போடா கமர்கட்டு...
போடி மாங்கா
போடா யானை பாகா

ஹா ...ஹா ...இருவரும் சிரித்துக்கொண்டார்கள்...

அருண் வா தூக்கறன்...
ஒருத்தி முதுகெலும்பு உடைய போகுது...
ஹா ....ஹா...என்ன ஒரு அக்கறை...
வேணாம்டி எனக்கு ஒரே வெக்கமா இருக்கு.
என் மாமனுக்கு வெக்கத்த பாரு.
நியாயமா நீ தான் படணும்.நான் படறன்...
என்னால நடக்கலான் முடியும் கால்ல பெருசா அடியில்லடி...

எனக்கு உன் மேல செம கோபம் தெரியுமா...அந்த பஸ் தான் நிக்காம போகுதுன்னு தெரியுது .அப்புறம் ஏன் அதல போய்ட்டு ஏறணும்.
கொஞ்சம் சீக்கிரம் போகலாம்னு .
லேட்டா போனா யார்னா பைன் போட்ருவாளா...
உனக்காகவே நாங்க எத்தனை பேரு இருக்கும்.
உனக்கு ஒன்னுனா என்னால தாங்கிக்க முடியாதுடா...
திருதிருனு முழிக்காத.இந்த மரமண்டைக்கு புரியுதா...

ம்ம்....கைத்தாங்களாக தோளோடு சாய்த்துக்கொண்டு இருவரும் நடக்கலானார்கள்.

அருணுக்கு வானதி தன் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து...
பேச்சே வரவில்லை...
வானதியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆட்டோ வந்துவிட்டது...
ஏறு அருண் என்று அருணை ஏற்றிவிட்டு ஏறினாள்.

அருண் மனதில்
இவ்வளவு பாசம் வைத்திருக்கும் வானதி என்னை வேண்டுமென்றே அடித்திருக்க மாட்டாள்.
என் நண்பர்களின் பேச்சை கேட்டு மூளை இல்லாமல் அடித்து விட்டேனே என்று வானதியின் தலையை வருடினான்.

அருணை உணர்ந்து கொண்ட வானதி புன்னகைத்தபடி.
அருண் ஓய்வெடு...
உறக்கம் வரவில்லை வானதி.
என் மடியில் உறங்கு நான் தாலாட்டு பாடுகிறேன் என்று புன்னகை பூத்தாள்.

அருண் அவளின் விரலை பற்றியபடி
அவள் மடியில் தலை புதைத்து
வானதி என்ன மன்னிச்சிடு டி...
ஏனடா ... நீ ஏதும் தவறு செய்யவில்லையே...

நான் உன் மண்டையை உடைத்தேன் டி...
நானும் தானே உன் மண்டையை உடைத்தேன்...மன்னித்துவிடு அருண்.
இரண்டும் சரியாப்போச்சு.

நீ தெரியாமல் உடைத்தாய்.
நான் தெரிந்தே உடைத்தேன்...

எப்படியோ உடைச்சன்ல .

ஆனா நீ மயங்கிட்ட...
உனக்கு ரத்தம் நிறைய போச்சுடி ...

அப்படியா...
உனக்கு தான் நிறைய ரத்தம் போச்சு.
நான் அதை பாத்து தான் மயங்கினேன்.
உன்னோட சத்தம் கேட்டு பார்த்தேன்.
அப்பவே மன்னிப்பு கேக்கணும்னு வந்தேன்.அதுக்குள்ள என்னென்னமோ ஆகிடுச்சி...
அப்புறம் கேக்கலாம்னு வரும்போது
என்னோட சைக்கிளை பஞ்சர் ஆக்கிடனு சொன்னாங்க .இருட்டுல தனியா தள்ளிட்டு போனன்.

நான் பஞ்சர் ஆக்கலடி.
என்னோட நண்பர்கள் தான்.
என் வலிய பாத்து .அப்படி பண்ணிட்டாங்க.நான் வேணாம்னு எவ்ளோ சொன்னன் கேக்கவேயில்லை..

ஓ ...அதனால நீ என் மீது கோபமா இருக்க என்று ...உன்னை தொந்தரவு செய்யல...
என்ன நீ அடிக்கும் பொழுது ...எனக்கு சந்தோசம் தான் ...என் தோழன் தானே அடிச்சான்.உன்னோட முகத்ல இருந்த புன்னகைக்காக எவ்ளோ அடி வேணாலும் வாங்கலாம்.
நீ எந்த தப்பும் பண்ணல கணவா...
அதெல்லாம் இப்ப எதுக்கு...
நீ நல்லா தூங்கு டா...

இப்ப என்ன சொல்றது வீட்ல.
உண்மைய சொல்லு.
சொன்னா திட்டுவா...
ஓ ...இது முதல்லே தெரியாதா...
சொல்லு திட்டுனா தான் புத்தி வரும்.

நான் திருப்பியும் உன் மண்டைய உடச்சிட்டனு சொல்லு...
அப்படி சொன்னா கல்யாணத்த நிறுத்திடுவா டி...
ஆசை தான்...
நீ எனக்கு தான் மாமா...
உன்ன எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுத் தரமாட்டேன்.காலையில எப்ப அருண் என்று கத்திக்கொண்டு ஓடி வந்தேனோ உன் அருகில் அப்பயே ஆயுசுக்கும் உன் அருகில தான்னு முடிவாகிடுச்சு.
இனி என் உடம்பு தான் உன்ன விட்டு போகும்.

நானும் உன்னை எதுக்காகவும் பிரியமாட்டேன்டி...
நீ எனக்கானவ...
எப்பொழுதும் என் கூடவே தான் இருப்ப...
மரணம் கூட எங்கிட்டருந்து உன்ன பிரிக்க முடியாதுடி...
உன்னோட துடிப்பு நிற்கும் போது
நான் உன்னோடு மரணித்திருப்பேனடி என்று சொல்லும் பொழுது.
வாயை பொத்தினாள்...

அவள் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.
அதை துடைத்துவிட்டு...
உன்னோடு உயிர்...உடல்...ஆவி...இன்பதுன்பம்...படுக்கையை மட்டுமல்ல...
உன் மரணத்தையும் பகிர்ந்து கொள்வேனடி....

நான் மிகவும் கொடுத்து வைத்தவள்...
எத்தனை பிறவி எடுத்தாலும் உங்கள் மனைவியாகவே வாழ வேண்டும்...
நான் உங்களுக்காகவே பிறந்து வாழ்ந்து உங்கள் மடியில் உங்களை பார்த்தபடி கண் மூடவேண்டும்.

நீங்க சொன்ன இடம் வந்துடுத்துமா...
நன்றி அண்ணா...
உங்க இரண்டு பேருக்கும் சுத்தி போடுங்க.என் கண்ணே பட்ருக்கும்.
அண்ணா எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்கண்ணா...
கண்டிப்பாமா...
எப்பயும் சந்தோசமா இருக்கணும் ரெண்டு பேரும்...
ரொம்ப நன்றி அண்ணா...

கைத்தாங்கலா அழைத்துக்கொண்டு சென்றாள் வானதி.
நால்வரும் என்னாச்சு என்று கேட்க.
வழுக்கி விழுந்துட்டாரும்மா.என்று பொய் சொல்லி சமாளித்தாள்.
பார்த்து போகறது இல்லையாப்பா என்று நலம் விசாரித்து.ஓய்வெடுக்க அனுப்ப...
நீங்கள் இருவரும் பேசிவிட்டீர்களா .என்று எல்லோரும் சந்தோசப்பட்டு போனார்கள்.
இருவரும் புன்னகைத்தார்கள்.ஹா ஹா...
நாங்கள் எப்பொழுது பேசாமல் இருந்தோம் என்று எதிர் கேள்வி வேறு...


திருமண வேலைகள் முடிந்து
திருமண வேளையும் வந்தது.
தந்தையும் தாயும் தாரை வார்க்க
அவர் கரம் பற்றிட்டாள்.
கரம் பிடித்த வேலை அவளுக்குள்...
ஆயிரம் மின்னல் வெட்டியது...
தனக்கு இனி எல்லாம் தன் கணவர் என்றே எண்ணியிருப்பாள்.
ஒரு நிமிடம் தாய் தந்தையை விட்டு பிரிகிறோமே என்ற நினைப்பை.
தன் கரத்தை இறுக்கப் பற்றி
உனக்கு எல்லாமாகவும் நான் இருக்கிறேன் ...என்னை நம்பி என்னோடு வா என்றது அக்கோர்வை.என் வாழ்வின் அழகான நொடி...இந்த நொடி தான் நாம் இருவரும் எதிர் பார்த்த நொடி...
இரு உடல் ஒரு உயிராக வாழப்போகும் நொடி...
மங்கல நாண் என் கழுத்தில் ...உன்னை என் மார்பில் இன்றிலிருந்து சுமப்பேன்.என் இதயத்தோடு உரசிக் கொண்டிருக்கும் தாலி...
இதயத்துடிப்பு அடங்கினாலும்...
என் நெற்றியில் குங்குமம் இட்டு பார்க்கிறாய்..
உன் கண்ணில் என்னை காண்கிறேன்.
என் இதயத்தில் நீ தெரிகிறாயா...
என் பாதம் பிடித்து
மெட்டி அணிவித்து...
என் உயிர்த்தோழியாக
என்னோடு எல்லாவற்றிலும் உடன் இருப்பாயாக என்று மனதோடு அணைத்துக்கொண்டாய் யாரும் அறியமாட்டார்கள் அவ்வணைப்பை...
பஞ்சபூதங்களையும் வணங்குகிறோம்...
பஞ்ச பூதங்களோடு ஐக்கியமானாலும் இந்த பந்தம் தொடரும் என்று வாக்களித்து....
உன் வேட்டி துண்டோடு
என் முந்தானை இணைத்து
அக்கினியை வலம் வந்துவிட்டோம்...
இனி உலகை வலம் வரப்போகிறோம்...
நவ தானியங்களையும் என் மடியில் சுமக்கிறேன்.நாம் நவரத்தினத்தை பெற்றிட...பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் ...நீ நானாகி ...நான் நீயாகி...நாம் நாமாக...
உந்தன் குல சாமி இனி எந்தன் குலசாமி...நம் குலசாமி...
இனி உன் குடும்பம் என் குடும்பம் இல்லை...நம் குடும்பம்...
உன்னுடைய தாய் தந்தை எனக்கு...
இரண்டாவது தாயும் தந்தையும்...
பிறந்த வீட்டு பெருமையோடு...
புகுந்த வீட்டின் பெருமையை காப்பாற்றுவேன்..மேம்படுத்துவேன்...நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் உற்ற துணையாக உங்களோடு கரம் கோர்த்து போராடுவேன்...உங்கள் மகிழ்ச்சி...கவலை...இனி நம் மகிழ்ச்சி... கவலை...எதையும் ஒன்றாக அனுபவிப்போம்....

இன்பதுன்பங்களை பகிர்ந்து
எல்லோரையும் சந்தோசப்படுத்தி
இருவரும் மகிழ்ச்சியாக வாழ
அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடையாளமாய்...

கவின்...தமிழ்...என்று மகனும் மகளும் பெற்று...அவர்களை
சிறப்பாக வளர்த்தோம்...
தாய்மொழி தமிழை கருவிலேயே கலந்தோம்...நல்ல எண்ணங்களை கருவிலேயே தந்தோம்...
தமிழ் ஒன்று போதாதா...மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்ல...
நாங்கள் எங்கள் தாய்மொழி அவர்கள் மூலம்..தலைமுறை கடந்து பரவும் என்று கற்றுத்தருகிறோம் ...நல்ல மனிதனை உருவாக்கும் எம் தமிழ்... உலகத்தின் முதல்மொழி...எப்பொழுதும் வாழும்...
செம்மொழி...

நாங்கள் எங்கள் கடமைகளை செய்தோம்...
தாய் தந்தையை பார்த்துக்கொண்டோம்...சந்தோசப்படுத்தினோம்...மனநிம்மதியாக எங்களை போல் கவனித்துக் கொண்டோம்.நல்ல மகள் மகனாக இருக்கிறோம்...
நல்ல தாய் தந்தையாக இருக்கிறோம்...
நாங்கள் எல்லோரும் ஒன்றாக உணவருந்துவோம்...
பகிர்ந்துக்கொள்வோம்...
வெளியே செல்வோம் இயற்கை...இசையை நாடி...
வீட்டுத் தோட்டத்தில் எல்லோரும் அமர்ந்து நிம்மதியாக மகிழ்ச்சியாக
ஊஞ்சலாடுவோம்...விளையாடுவோம்.ஆறு பேருமே சிறுவர்கள் தான்...

நாங்கள் சிறந்த கணவனும் மனைவியுமாக
எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்கிறோம்...

எல்லோருக்கும் உண்மையாக இருக்கிறோம்...
நட்புக்கள்..உறவுகள்...சமூகம் என்று எல்லாவற்றிற்கும்.

அவர்கள் தேவைகள் எல்லாவற்றையும் தந்தோம்...
அது எங்களுடைய கடமை...
அவர்களுடைய வாழ்க்கையை வாழ பாதை அமைக்க ஒளி தந்தோம்...

மகளுக்கும் மகனுக்கும் திருமணம் செய்து வைத்தோம்.
இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ ...
பெயரன்கள் பெயர்த்திகள் எடுத்து விட்டோம்...
பாட்டியும் தாத்தாவும்
தமிழை கற்று கொடுத்தோம்...
நிறைய நல்ல கதைகள்...பண்புகள்...சொல்லிக் கொடுத்தோம்...நல்ல விதைகளை விதைத்தோம்...
நாளை நல்ல பலன் தரும் சமூகத்தில்...நாங்கள் மீண்டும் சிறுவர்களாகி அவர்களோடு விளையாடுவோம்...அவர்களுக்கு நம்ம ஊரு விளையாட்டுகள் தெரியும்...உணவுகள் தெரியும்...எது நல்லது கெட்டதுன்னு பிரிச்சிப்பாக்க தெரியும்...எல்லாம் நம்ம தாய்மொழி தமிழால்...
தமிழ் மட்டும் போதும் நல்ல மனிதனாக வாழ...
வாரம் ஒரு முறை குடும்பத்தோடு குதூகலமாக வெளியே சென்று வருவோம்...
வீட்டில் எல்லோரும் புத்தகம்...இசை..இயற்கையை வாசிப்போம்...நேசிப்போம்...வளர்ப்போம்...வாழவைப்போம்...


நாங்கள் இருவரும் சிறு வயது வானதி அருணாகி
எங்கள் வாழ்க்கையை வாழ்கிறோம்...
மீண்டும் உலகை சுற்றப்போகிறோம்...எங்கள் இருவருக்கும் பிடித்த இடங்கள்...
அவருக்கு பிடித்த இடங்கள்...அவளுக்கு பிடித்த இடங்கள்...காடு...மலை...அருவி...கடல்...வயல்...சோலை...என்று காதலோடு நட்போடு சுற்றுகிறோம்...

என்னங்க...
ஸ்வெட்டர் எடுத்து வைக்கலயா...
ரொம்ப குளிருதுடா..
அதான் நான் இருக்கேனே டி
ஏன் ஸ்வெட்டர்...

ஹா ஹா...என்ன பிளேன்...
என்றே...இறுக்கி அணைத்துக் கொண்டாள் வானதி...
அருணும் சிரித்துக் கொண்டே அணைத்துக் கொண்டான்.

அருண்...
என்னடி...
டிவிய ஆப் பண்ணு.
ம்ம்..
கிட்டவா ...
உட்காரு...
உடனே சட்டென்று மடியில் படுத்து தூங்கிவிட்டாள் கும்பகர்ணி...
இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா இரு உன்ன வச்சிக்கறன்.

தூங்கும் பொழுது கூட
அழகா இருக்கடி...
என்ன ஏன்டி இப்படி தனியா புலம்ப வச்சிட்டு தூங்கற.
பாரு அழகான மலை ...
ஊதக்காத்து...
வானதியின் முகத்தில் புன்னகை பூக்கிறது...
நடிக்கிறா நடிக்கிறா...
ஹா ஹா...
சரி வெளிய போய்ட்டுவருவோமா...
நிச்சயமா மாமா...
சும்மா ...உன்ன ஏமாத்தனன்...
வா போகலாம்.
இருடி ஸ்வெட்டர் எடுத்துட்டு வர்றேன்.
அதான் நீ இருக்கியே மாமா...
ஒரு போர்வைக்குள் இருவரும் இணைந்து இயற்கையோடு நடக்க
தேகம் தீண்டுகிறது பனி...
இசை பாடும் பறவைகளில்
இசையாகி நின்றார்கள்...
ஒரு ஸ்வெட்டரை இருவரும் உடுத்திக்கொண்டார்கள்...
இலைகளை பறித்து ஆடைகளாய் உடுத்திக் கொண்ட அந்த அழகான வாழ்வை வாழ்கிறார்கள்...
முழுக்க முழுக்க இனிமையான இயற்கையோடும் இசையோடும்...
அவர் மார்பில் சாய்ந்தபடி
கரம் கோர்த்து...
கேட்டேன்...
இங்கேயே இருந்துவிடலாமா...
இருந்துவிடலாமடி...
இப்படி ஒரு வாழ்க்கை வாழத் தான் ஆசை...
ஆமாம்...காடுகளில் எங்கும் தூய்மை பசுமையே இருக்கிறது...
நாட்டில் அது இல்லை...

இங்கே மிருகங்களை தெரியும்...
நாட்டில் தெரியாது...
ஆதிவாசியாக இங்கேயே வாழ்ந்து மரணித்து மீண்டும் பிறந்து வாழ்வோம்...

நான் உனக்கு சிறந்த கணவனா இருந்தேனா வானதி...

இதுல உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.
நீங்க சிறந்த கணவர்...
சிறந்த ஆண்...
நீங்க என் உடம்புக்குள்ள இருந்த மனச பாத்தீங்க...
என் உணர்வுகளை எப்பொழுதும் மதிச்சிங்க.

இருவரும் பசும் புற்களில் விரல் கோர்த்தபடி படுத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.

ரயில் போகும் சத்தம் கேட்டு
சின்ன வயது ரயில் வண்டி விளையாட்டை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

நண்பா
டே எரும...
அங்கே பாரு
எங்கடி...
வா போகலாம்...
எங்கனு சொல்லவேயில்ல...

இருபுறமும் பூக்கள் பூத்துக்குலுங்க
ஒற்றையடிபாதை
அதன் முடிவில் அழகான ஆலமரம்
அதில் ரீங்காரமிடும் குயிலினங்கள்...
மாமரத்தோட்டங்கள்...
களான்கள் பஞ்சு மெத்தை விரிக்க
மயில்கள் எல்லாம் தோகை விரித்தாட
நீலவானத்தில் மழை பொழிய
நீயும் நானும் அதில் நனைய...
அருவிகளில் தலை துவட்ட...
கிளைகள் ஆட்டி ஆசி பெற...
பழங்கள் பறித்து உண்ண...
இலைகள் நமக்காக சுவாசிக்க...
பழுத்த இலைகள் வண்ணமாக...
ஏழிசையும் கானகம் பாட
அதை ரசித்து நுகர
ஆங்காங்கே மழலை பூக்கள் மலர...
உலகமே அழகாய் பைந்தமிழாய் பசுமையாய்...
அதில் நீயும் நானும்
இயற்கையோடு இயற்கையாய்...
இசையோடு இசையாய்...

மீண்டும் அங்கிருந்து கைகோர்த்து.
ஒருவருக்கு இன்னொருவர் வழித்துணையாய்
நடந்து அறைக்கு வந்து...
ஒருவரை ஒருவர் உயிராலும் உடலாலும் ஆவியாலும் உணர்வாலும் தமிழாலும் இயற்கையாலும் இசையாலும் இணைந்து நெஞ்சோடு நெஞ்சம் இணைந்து கைக்கோர்த்து ...
கட்டியணைத்தபடி ஒருவரையொருவர் கண்ணோடு கண் நோக்கியபடி கண்ணுறங்கினர்...


இப்படியே இவர்கள் வாழ்க்கை தொடரும்...

இருவரின் சவக்குழியிலும் தொடரும்...
ஒருவர் இறந்தால் இன்னொருவரால் உணர முடியும்...
ஒரு அன்றில் இறந்தால் இன்னொரு அன்றில் வாழுமா...
அப்படியே நானும் அவரும்...

வானதி அவரை பார்த்தபடி உறங்க...
அருண்மொழியும் வானதியை நெஞ்சோடு தாங்கிக் கொண்டு வானதியை நோக்கியபடி உறங்கினான்.
வானதியின் இதயத்தில் துடிப்பு குறைவதை உணர்ந்த
அருண்மொழியின் இதயமும் இணைந்து கொண்டது வானதியின் இதயத்தோடு...
வானதி அருண்மொழியை அணைத்துக்கொண்டாள்.
அருண்மொழி வானதியை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

அவர்களை பிரிக்க எமனால் மட்டுமல்ல
மனிதர்களாலும் இயலவில்லை...
அவர்கள் இருவரின் பிடியை விலக்க இயலாமல்
இருவரையும் இணைத்தே
புதைத்தனர்...
வானத்தில் இருவரும் கைக்கோர்த்து
உலா வருகின்றனர்
இயற்கையை இசையை ரசித்து...
இனி அவர்கள் வாழ்க்கை மேலே அப்படியே தொடரும்.....

வானதி அருண்மொழி பிறவி முடிந்தது

இனி இசையாகி (இயற்கை=தமிழ்) வாழ்வார்கள்.
இசைக்கு அழிவில்லை...
எங்கள் அன்பிற்கும் அழிவில்லை...
முடிவில்லை...

அன்பு தொடரும்...

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Sep-17, 6:42 pm)
பார்வை : 677

மேலே