கவிதைத் திருவிழா 👄உயிரே என்னவளே❤

முதுமையில் என் காதல் நினைவுகள்❤
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

உயிரே ❤என்னவளே!
என் இதயத்தில் நுழைந்தவளே
காலம் அதுக் கடந்தாலும்
நம் காதல் நினைவுகளே
அது மலரும் பூக்களே.......!
வாசம் இழந்தப் பூவாய் நானும்
எனைச் சேகரித்துக் கொண்டப் புத்தகம் நீயோ!
எழுதி வச்சப் பக்கம் எல்லாம்
நம் இளமைக் காதல் வாசம் வீசுதே!
முதல் காதல் முதுமையில் நினைத்தாலும்
பூக்குதே!

ரா ஸ்ரீராம் ரவிக்குமார்
9994640217

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Sep-17, 12:57 am)
பார்வை : 701

மேலே