தாய் மாமன்

தாயை போல் ஒரு
உறவடி அது
"தாய் மாமன்" உறவடி.....

தாயின் அன்பும்
தந்தையின் அக்கரையும்
சேர்ந்ததொரு பந்தமடி....

தந்தையாய் நின்று
தன் தங்கையை காப்பான்
குமரியாய் வளர்ந்திட
அவளுக்கு மணம் முடித்து
மகிழ்வான்.....

குழந்தை என நினைத்தவள்
ஒரு குழந்தையை
ஈன்று எடுக்க
தொட்டில் சேலையுடன்
வெளியே நிற்பானடி...

வெள்ளி சங்குடன்
தங்க கொலுசு மின்ன
காத்திருப்பானடி
தன் குட்டி மருமகளுக்காக.....

அவன் மடியில்
இடம் கொடுத்து
அவள் காது மடலுக்கு
ஆபர்ணம் பூட்டி
ரசிப்பானடி......

ஈரேழு வயதில்
அவள் பருவம் அடைந்து விட
மேளதாளத்துடன்
பட்டுச்சேலை பளபளக்க
தாய் மாமன் சீரை
சுமந்து வருவானடி......

அழகிய மங்கையாய்
மணக்கோலத்துடன்
நின்றிருக்க,
தங்க பட்டம் கட்டி
முதல் மாலை போட்டு
தன் உரிமையை
நிலைக்கச் செய்வானடி....

தொட்டில் முதல்
மணமேடை வரை
தொடரும் இந்த பந்தமடி
அது "தாய் மாமன்"
சொந்தமடி......

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (12-Sep-17, 4:40 pm)
Tanglish : thaay maaman
பார்வை : 12793

மேலே