அவளாகிய நான் ஏக்கங்களும் அவளங்களும்

தன் வம்சம் தலைத்தது என்று
"அப்பா" குதூகலிக்க..
கள்ளி பாலுக்கு தப்பியது என்று
"அம்மா" பெருமூச்சு விட..

சொத்துகளுக்கு வாரிசு வந்தது என்று
"பாட்டி" கொண்டாட ..
நான் பிறந்தேன்........

மாரிலும் தோளிலும்
போட்டு வளர்த்தார் அப்பா,
மகன் என்பதற்காக...

பொட்டு வைத்து பூ வைத்து
அழகு பார்த்தாள் அம்மா
இனி மகள் பிறக்க போவதில்லை
என்பதற்காக...

தங்க கங்கட்டியை
கலட்டி கொடுத்தாள் பாட்டி
பேரன் தங்கத்தோடு
விளையாட வேண்டும்
என்பதற்காக....

அத்தனையும் பொய்யானது.....
கள்ளி பாலுக்கும்,
தகப்பனின் வெறுப்பிலிருந்தும்,
பாட்டியின் குத்தல் பேச்சிலிருந்தும்,
தப்பியவன் என்று
பெருமிதம் கொண்டிருந்தேன்......
எல்லாமே தலைகீழானது,

ஆண் பிள்ளைகளை கண்டால்
ஒதுங்கிபாேனேன்,
பெண் பிள்ளைகளோடு
உறவாட துடித்தேன்,
கால் சட்டையை தவிர்த்து
அம்மாவின் புடவையை
விரும்பினேன்,
கொஞ்சம் கொஞ்சமாய்
உணர்ந்தேன் எனக்குள்
எழும் மாற்றங்களை...

என் நடையில்
என் உடையில்
என் பேச்சில்
மாற்றங்கள்.......

முறுக்கு மீசையுடன்
ஆண்களை கண்டால்
எனக்க அச்சம்
தலைக்கேறும்.....

வாட்ட சாட்டமான
ஆண்களை கண்டால்
என் மனம் அலைபாயும்...

அழகிய மங்கையரை
கண்டால் எனக்குள்
பொறாமை தீ கொழுந்து
விட்டு எரியும்....

இதில் என் தவறு ஏதுமில்லை
என்னை புரிந்து கொள்ள
ஆளும் இல்லை...

பெண்ணின் கர்பமும்
என் உணர்வுகளும்
ஒன்றுதான்,
மறைக்க நினைத்தால்
தோல்விதான் மிஞ்சும்.....

இந்த சமூதாயத்தில்,
என்னை சீண்டி சந்தோஷ
பட்டவர்கள் பலபேர்....

என் உணர்வுகளை தாக்கி
அதில் வழியும் குருதியை
பருகியவர்கள் பலபேர்...

மனிதனின் கொடிய
உணர்வாம் முறைதவறிய
காம இச்சைக்கு என்னை
பலியாக்க துடிக்கும்
காம வெறியர்கள் பலபேர்...

நைந்து போன சோற்றில்
ஊறும் புழுக்களை பார்பது போல்
என்னை அருவருப்பாய் பார்த்து
ஒதுங்கி செல்பவர்கள் பலபேர்...

கோடிகணக்கான விந்துக்களில்
ஒரு விந்து தான் குழந்தை
என உருவாகும்,
மற்றவை மரணிக்கும்,

அதுபோல தான் என்னை
போன்றவர்களின்
வாழ்க்கையும்,

இந்த சமூதாயத்தால் ஒதுக்கப்பட்டு
வழிதவறி மண்ணில்
புதைக்கபட்டவர்கள்
ஏராளம்....

என்னை போன்றவர்களையும்
அறவனையுங்கள்,
நாங்களும் மனித இனம் தான்..
எங்களது அடிப்படை உணர்வுகளையாவது
மதிக்க முயற்ச்சி செய்யுங்கள்..

மதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை
மிதிக்காதீர்கள்..

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (12-Sep-17, 4:54 pm)
பார்வை : 291

மேலே