அம்மாவின் என் குரல்
என் வயிற்றை பட்டினியாக்கி விட்டுத்தான் உன் பசி போக்கினேன்
அதை நான் ஒரு நாளும் காட்டிக்கொள்வதில்லை... என் மகன் எனக்கு மகராசன்
அப்பாவிடம் கோபப்பட்டு என்னிடம் வந்து பேசுவாய்... அதற்கு நான் கோபப்படத்தான் முடியுமா?
என் மீது அவ்வளவு பாசம்.... என் மகன் மகராசன்
கஷ்டம் என்பதை உனக்கு கற்றுத்தரவில்லை
பசியை உனக்கு காட்டித்தரவில்லை
பாசத்தை காட்டினேன் அதை நீ எற்றுக் கொண்டாயோ தெரியவில்லை
அம்மா.... என்று கூப்பிடும் அந்த மூன்றெழுத்துத்தான் என்னை இன்னும் ஒரு வருடம் வாழவைக்கும்...
உன் வாழ்க்கையை நீயே தேடிக்கொண்டாய்.... மனைவி உனக்கு அவள் இன்னொரு தாய் என்று எண்ணுகிறேன்.... ஆனால் எனக்கு மகளாக பாக்கிறேன்.... முடிந்தால் இதை அவளிடம் கூறு....
நான் உங்களுக்கு எதிரியில்லை
நீங்களும் எனக்கு எதிரியில்லை
என் மகன் எனக்கு மகராசன் தான்....