மனிதனில்லை

அம்மாவின் சமையலும்
இல்லாளின் குழையலும்
தராத சுவை ஏதுமில்லை
நிலா ஒளியின் குளுமையும்
தமிழ் மொழியின் செழுமையும்
தராத சுகம் ஏதுமில்லை
காரிடை கொஞ்சலும்
நேரிழைக் கெஞ்சலும்
தராத இன்பமேதுமில்லை
திருக்குறள் வரிகளும்
திருமறை மொழிகளும்
தராத நெறி ஏதுமில்லை
தாய் முலைப் பாலும்
மலர் தரும் தேனும்
தராத ஊட்டம் ஏதுமில்லை
இதனை அறியாமலும்
உண்மை புரியாமலும்
வாழ்பவன் மனிதனில்லை

எழுதியவர் : மோகன் சபாபதி (12-Sep-17, 8:30 pm)
சேர்த்தது : Mohan Sabapathy
பார்வை : 82

மேலே