வலிக்காத காயங்கள்
வலிக்காத காயங்கள் எந்நாளும் நட்பில் உண்டு
ஏமாற்றம் என்பதே இல்லை
நட்பிலும் தாய்மை உண்டு
திட்டமிட்டு வரவில்லை என் நட்பு
என்னை திட்டாமல் இருந்ததில்லை
என்னை திட்டினாலும் அக்கறையே
நட்பை தவிர யாருக்கு உண்டு
தோள்சாய மட்டுமல்ல நட்பு
நான் தோல்வி காணாமல்
இருக்கவும் கண்தூங்காமல்
எனக்காக விழிப்பதே என்னுள் நட்பு
சில நேரம் காயபடுத்தும்
சில நேரம் அழுகை கொடுக்கும்
எப்போதும் சிரிப்புடன் இருக்கும்
என்னுடன் தோள் சாய்ந்திருக்கும்
என் நட்பு என்றென்றும்