ஊர் உறங்கும்

ஊர் உறங்கும்
சாமத்தில்.....
என் விழி
உறங்க மறுக்கிறதே.....

நினைத்து
நினைத்து
மதிக்கிறது
உன் நினைவு......

உனைக் காணாத
கணமெல்லாம்
ரணமாச்சு.....உன்மீது
தீராத
காதல்தான்.....தீயாகி
என்னை
சுட்டெரிக்குதே.....அணைத்து
அணைத்துவிடு
அன்பே.....!!

விழிநீரில்
வலி தெரியாது......
ஈரங்கள்
சொல்லும்
ஓராயிரம்
துயரங்கள்.....!!

ஒருமுறைதான்
காதல்......பிறக்கும்
ஆனால்
ஒவ்வொரு முறையும்
செத்துப்
பிழைக்கும்
நிலைதான்.....இங்கே
பலருக்கு......!!

செல்லமாய்
அழைக்கும்
செல்லப்பெயர்.....
சொல்லும் போதும்
சொல்லக்
கேட்கும்
போதும்......இல்லாத
சுகம்
எல்லாம்
கிடைக்குமே
நாம் அறிவோமே.....!!

தவறிப்போன
வாழ்க்கையால்
பதறிப்போனது
வாழநினைத்த
வாழாத
வாழ்க்கை.....!!

இதயத்தை
நிரப்பும்
சுகமான
இசைபோல....
உன்
வரவை
நான் எதிர்பார்ப்பேனே.....!!!

எழுதியவர் : thampu (15-Sep-17, 2:13 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : oor urankum
பார்வை : 358

மேலே