என்னுள் உள்ள உன் வலி
உன் வலிகல்
அனைத்தையும் நான் எனது ஆக்கிக் கொள்கிறேன்.
உன்னுடை சந்தோஷத்திலேயே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
உன்னுடைய இந்த சந்தோசம் காலம் முழுவதும் நிலைக்கும். என்றாவது ஒருநாள் உனக்கு என் அன்பு புரியும்! ஆனால் அன்று நான் இருக்க மாட்டேன். என்னுடைய சந்தோஷம் நீ!!என்னுடைய வாழ்க்கையும் நீயே!எனக்கான வலி நீயே!!
என்னைச் செதுக்கிய
உளி நீயே!
உன் நினைவுகள் ஏற்படுத்திய வலிகள் என்னை உளிகள் கொண்டு செதுக்கின.
இன்று எனக்கென ஒரு முழு உருவம் கொண்டு இருக்கின்றேன.
என் அருகில் இருப்பாய் என்று பார்த்தேன்,
ஆனால் இன்று தனியாக நிற்கின்றேன் வேறு வழியின்றி என்றாவது ஒருநாள் என் நினைவுகள் உனக்குள் வருமாயின் அன்று சிலையாக நிற்கும் எனக்கு உயிர் வரும்