விழித்தெழு தோழா விழித்தெழு

இளைஞரே!
போராட்டம் நிறைந்த வாழ்வோடு
போர்க்களம் பூண்ட உலகோடு
ஒவ்வொரு நாளும் வாழ்கின்றாய்.....

வாழ்க்கை உனக்கு கற்றுத்தரும்
வாழ்வதற்கான பாடத்தை .......
உனது வாழ்வின் பொருளை
நீ உணரும் நேரம்
உனக்கான பாதை-உன்
கண் முன் தோன்றும்.....

அவமான படுகிறாயா?
மகிழ்ச்சிக்கொள்....
அது தான் உன் வெற்றிக்கான
முதல் தூண்டுகோல் !

புறக்கணிக்கப்படுகிறாயா!
ஏற்றுக்கொள்....
அது தான் உனது முன்னேற்றத்திற்கான
ஊன்று கோல்!

வறுமையில் வாடுகின்றாயா?
தெரிந்துக்கொள்......
அது தான் உன் பொதுநல சிந்தனையின்
வழி கோல்!

ஒவ்வொரு நிமிடமும்,
நீ கற்றவற்றை தொடர்புபடுத்து,
உனது முன்னேற்றத்திற்கான
தேடல் பிறக்கும்.

பிறந்த தேடலை நினைவாக்க
பாடுபடு!
முயற்சியை விடா முயற்சியாக்கு!
நீ கண்ட,
அவமானம்
வறுமை
புறக்கணிப்பை
அனுதினமும் நினைத்துப்பார்!
அது தான் உன்னை உற்சாகப்படுத்தும்
"ஊக்க மருந்து"

இளைஞரே!
உன்னை நேசி!
உன் திறமையை நேசி!
உனது இலட்சியத்தை நேசி!
உனது எண்ணத்தை நேர்மறையாக்கு!
ஒரு நாள் வெல்வாய்
இந்த போர்க்களத்தில்,
அனைவரின் பார்வை
உன் மீது விழும் படி செய்து.......

எழுதியவர் : தீபா ராஜ்மோகன் (16-Sep-17, 11:31 pm)
பார்வை : 332

மேலே