பணமே தேவைதானா உனக்கு மதிப்பு

'பணம்' என்ற அரக்கனை
வெறுக்கிறேன் நான்

இருப்பவனிடம் சேருகிறாயே!
இல்லாதவனையும் திரும்பி பாராயோ!

வெறும் காகிதமாகிய உனக்கு
மதிப்பை தந்தவன் எவன்?

உன்னால் நாள்தோறும்
பந்தாடப்படவா நாங்கள் ?

அரக்கனே!
கல்வி கற்க,
வேண்டுமா நீ ?

மருத்துவம் பெற,
வேண்டுமா நீ ?

உணவு உன்ன,
வேண்டுமா நீ ?

உனை வைத்து,
எனை எடை போடுகிறான்,
பணக்காரன் எனும் 'பரதேசி'

பணம் என்ற பேயே!
நீ ஆணவத்தை
உருவாக்குகிறாய்!

நல்ல உறவுகளை
பிரிக்கிறாய்!

தீயவர்களை அருகே
சேர்க்கிறாய்!

அன்பை புறக்கணிக்க
செய்கிறாய்!

உயிருக்கே ஆபத்தை
விளைவிக்கிறாய்!

இவ்வளவையும் செய்யும்
வெற்று காகிதமே!

உனக்கு தேவையா ?
இந்த 'மதிப்பு'

எழுதியவர் : தீபா ராஜ்மோகன் (16-Sep-17, 11:57 pm)
பார்வை : 141

மேலே