உயிர் தீண்டும் தென்றல் நீயே-------இசைப் பாடல்

படம் :கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல் :ஒரு தெய்வம் தந்த பூவே -மெட்டு
-----------------------------------------------------
கண்ணில் நில் நில் நில் நில்
அன்பை சொல் சொல் சொல் சொல்
என்னின்பம் நீயல்லவா -ஓ ...
என்னின்பம் நீயல்லவா

பல்லவி

உயிர் தீண்டும் தென்றல் நீயே
ஒளி வீசும் தங்கத் தீவே

நேசம் விளையும் வயல் தேசம் நீ
கால்கள் முளைத்துவரும் பாசம் நீ
இரவு விடிவதுன் கண்ணாலே
இதயம் துடிப்பதே உன்னாலே
மடியில் தூங்கும் மலரே

உயிர் தீண்டும் தென்றல் நீயே
ஒளி வீசும் தங்கத் தீவே

கண்ணில் நில் நில் நில் நில்
அன்பை சொல் சொல் சொல் சொல்
என்னின்பம் நீயல்லவா -ஓ ...
என்னின்பம் நீயல்லவா

சரணம் -1

உயிரின் ஈர்ப்பு நீ
உரசும் விலகல் நீ
குளிரும் பனியும் நீ
கொஞ்சும் நெருப்பு நீ
விளக்கின் சுடரும் நீ
அடியில் நிழலும் நீ
விளக்கின் சுடரும் நீ
அடியில் நிழலும் நீ
முளைக்கும் விதையும் நீ
முறியும் கிளையும் நீ
முளைக்கும் விதையும் நீ
முறியும் கிளையும் நீ
நனையும் பாலை வனமே நீ

உயிர் தீண்டும் தென்றல் நீயே
ஒளி வீசும் தங்கத் தீவே

கண்ணில் நில் நில் நில் நில்
அன்பை சொல் சொல் சொல் சொல்
என்னின்பம் நீயல்லவா -ஓ ...
என்னின்பம் நீயல்லவா

சரணம் -2

எனது வரவு நீ
இனிய செலவு நீ
அழகுக் கனவு நீ
அதிரும் விழிப்பு நீ
ருசிக்கும் உணவு நீ
வதைக்கும் பசியும் நீ
ரசிக்கும் இசையும் நீ
பிறழும் தாளம் நீ
வர மாக மாறும் சாபம் நீ

உயிர் தீண்டும் தென்றல் நீயே
ஒளி வீசும் தங்கத் தீவே

கண்ணில் நில் நில் நில் நில்
அன்பை சொல் சொல் சொல் சொல்
என்னின்பம் நீயல்லவா -ஓ ...
என்னின்பம் நீயல்லவா

எழுதியவர் : இளவெண்மணியன் (17-Sep-17, 6:36 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 146

மேலே