பருவக்குளிர்

புளிக்கவைத்த மாவு புளித்து பொங்கி வழிந்தோடி டும் போல் குளிரும் வரைதான் அன்பை ப்பொழிவர்
காதலிக்கும் கன்னியர்

அணலின் அணைப்பில் சிக்கிக்கொண்டனர் என்றப்பின் குளிரும் மறையும் குளி குளியாது
இருப்பர் அப்போது வானமே இடிந்து பூமிபிளக்க இல்லறமெனும் பாதாள
படுகுழியில் விழுவர் அழுவர் எழுவதில்லை ஆயுள்வரையில்

பனிமழையினால் வரும் குளிரன்று
பூண்டு மிளகு ரசம் இதனை மாற்றிவிடும்

இதுவோ மிக ஆபத்தான பருவக்குளிர் ஆண்டுப்பார்த்து மாண்டுப் போகும்வரை விடாது

சுட்டுக்கொண்டோர் சுடும் தொடாதே தூரம் போவென்றால் நம்பிக்கை யில்லாதவர்கள் தொட்டு பார்த்து சுட்டுக்கொண்டு துடிக்கிறது வாடிக்கை யாகிவிட்டது

நம்பிக்கை என்பது நாற்று அதை பறித்து நெஞ்ச நிலத்தில் நட்டால்
அறுவடைக்கு விளைந்து நில்லும்

நாற்று நாற்றாகவே இருப்பின்
வெள்ளாமை கொள்ளாமை கல்லாமை
போலாவார் நிச்சயமாக

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (17-Sep-17, 2:36 pm)
பார்வை : 94

மேலே