அமைதியான இடம்
பச்சை, பச்சை, புல்வெளிகளில் நான் அலையும்போது பள்ளத்தாக்குகள் இருளில் மூழ்கியிருக்கின்றன.
ஆழ்ந்த இருண்ட சுரங்கங்களில் என் தோள்களில் என் சுமைகளை வைத்தேன். நான் அவனது ஆடு என்றும், அவன் எனது மேய்ப்பன் என்றும் எனக்குத் தெரியும்.
ஒவ்வொரு அடிச்சுவடும் நான் என் வழியைக் காண்கிறேன்.
நான் இடறும்போது, என்னைத் தூக்கிபிடித்து, பள்ளத்தாக்குகள் வழியாய் என்னைத் தூரப்படுத்துகிறான்.
நீர்ப்பாசனமாய் உயிர் கொடுக்கும் தண்ணீருடன் ஓட்டம். நான் உட்கார்ந்து தங்குவதற்கு இடம். அவனுடன் நான் அமைதியாக இருக்கிறேன்.
என் ஒவ்வொரு எண்ணத்தையும்
அவன் அறிந்திருக்கிறான்,
என் கனவின் இரகசியங்களும் கூட.
அவனது ஆசீர்வாதம் ஒவ்வொரு நாளும் என்னுள் தூண்டுகிறது சிந்தனை நீரூற்றாய் எழுத்துகளைப் பொறிக்க.
அவனது ஆன்மா மூலம் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று எனக்கு தெரியும்.
நான் ஆன்மலோகத்தின் வெளிச்சத்தைப் பார்த்தேன்.
படைப்பாக்க வடிவமைக்கப்பட்ட நிறங்கள் சுற்றியுள்ள எல்லாமே
அவனது கைகளாய் என்னை ஆறுதல்படுத்தின. அவனது குரல்,
அவனது கவனிப்பு, என்னுள் அமைதிக்கு இடம் தருகிறது...