உள்ள முதிர்ச்சி செய்யும்

இவ் வானம் சாகசம் செய்யும்...
உயர் சாத்வீகம் சொல்லும்..
உள மாசறுக்கும்...
துவள்ந்த எண்ணங்களை ஏர் பிடிக்கும்
தன் முகம் சிரிக்கும்..
தாமதமாய் வெளுக்கும்..

சில பொழுதில்
என்னை மூர்ச்சித்து..
உள முதிர்ச்சி செய்யும்..
தொடர் விழுதாய்
என் உள் கனிந்தென்னின் உருவகம் சொல்லும்..

எத்தனை சுகம் தடித்தேன்...மெதுவாய்..
என் மேய்ந்த உயிர் துளிர்த்தேன்
உள்ளக் கனுவாய்..
நன்றிது..நன்றிது..நன்றிதுதென்றும்.

-சங்கர் சிவக்குமார்

எழுதியவர் : சிவசங்கர்.சி (17-Sep-17, 9:59 am)
பார்வை : 455

மேலே