பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்
பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
பிஞ்சு மனங்கள்
கொஞ்சுமொழி பேசி
செல்ல மழையில்
குறும்புகள் செய்வதை
குடு குடு கிழவனும்
கேட்டு பார்த்து மகிழ்வான் !
சாரல் செல்ல மழையை
இளமையும் முதுமையும்
கள்ளமில்லா உள்ளங்கள்
தள்ளாடும் தாய்மையும்
மகிழ்வுடன் வரவேற்கும் !
செல்ல மழையில்
செல்லங்கள் காகிதக்கப்பல்
கத்திக்கப்பல் மிதக்கவிட்டு
கூக்குரலிட்டு ஆடிப்பாடி
களிப்புருவதைக் கண்டு
நம்மவர் மட்டுமல்ல
செல்ல மழையும்
சேர்ந்தே மகிழும் !
பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை