என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 50
அர்ச்சனாவில் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அனைவருமே பிரவீனின் மேல் ஒரு தனி மரியாதை வைத்திருப்பதை அவன் உணர முடிந்தது.
அந்நேரம் ரம்யா விஜிக்கு போன் செய்தாள்.
"ஹலோ, அக்கா, என்ன பண்றீங்க, எங்க இருக்கீங்க, ஆப்டர்நூன் ப்ரவீனுக்கு கால் பண்ணும்போது இன்னிக்கு அர்ச்சனா ல பெரிய பார்ட்டி இருக்குன்னு சொன்னாரே, அர்ச்சனால தான் இருக்கீங்களா?" என்றாள் ரம்யா.
"ஆமாம் ரம்மி, பட் வி ஆர் மிஸ்ஸிங் யு இந்த திஸ் கோல்டன் அக்கேஷன் டி, எங்க எல்லாரோட செல்லக்குட்டி நீ" என்றாள் விஜி.
"சும்மா சொல்லாத அக்கா, அப்டி இருந்தா என்கூட இங்க சென்னை ல பார்ட்டி வெச்சுருக்கலாம் இல்ல?" என்றாள் ரம்யா.
"அப்டி இல்ல டி, பிளான் இங்க வந்து தான் போட்டோம், சாரி டி, நீ தான் எங்க எல்லாரோட செல்லம்" என்றாள் விஜி.
"சரி அரி, சும்மா தான் சொன்னேன், என்ஜாய்" என்றாள் ரம்யா.
"சாரி டி பட்டு, நீ நெக்ஸ்ட் டைம் வரும்போது கண்டிப்பா ஒரு நல்ல கெட் டு கெதர் வெப்போம்" என்றாள் விஜி.
"சரி அக்கா, பை" என்றாள் ரம்யா.
மிகவும் நன்றாக இருந்தது. பிரவீன் தனது குடும்பமாகவே எண்ணிக்கொண்டான். என்ன இருந்தாலும் இரவு உணவு ஓட்டலில் உண்பதை பிரவீன் தவிர்ப்பதால் அங்கே வெறும் ஐஸ்க்ரீமும் பழக்கலவையும் தான் உண்டான்.
ஆண்டு இரவு மீண்டும் விஜி வீட்டில் உறக்கம். காயத்ரியும் அவர்களோடு தங்கினாள்.
"ஏய் விஜி, நாளைக்கு நாம ஜாயின் பண்ணனும், சீக்கிரம் தூங்கு" என்றாள் காயத்ரி.
"ஆமாம் டி, ஓகே ஓகே, பிரவீன், நீ இந்த ரூம் ல படுத்துக்கோ, நாளைக்கு மார்னிங் பாக்கலாம், குட் நைட்" என்றாள் விஜி.
காயத்ரியும் குட் நைட் சொன்னாள்.
"ஓகே, விஜி, ஓகே காயத்ரி, குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்றான் பிரவீன்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும், விஜி ப்ரவீனுக்கு "ரியலி வெறி ஹேப்பி டு சி யு அகைன் டா, மிஸ்ட் யு எ லாட்" என்று மெசேஜ் அனுப்பினாள்.
ஆனால் பிரவீன் உறங்கி இருந்தான். பதில் ஏதும் வராததால் விஜி மெல்ல எழுந்து பிரவீன் தூங்கும் அறைக்கு வந்தாள், அவனோ உறங்கிக்கொண்டிருந்தான். அவன் அருகே வந்து அவன் உறங்கும் அழகையும் அவனது முகத்தையும் பார்த்து "செல்ல பையன் தூங்கறான்" என்று சிரித்தபடியே சென்றுவிட்டாள்.
மறுநாள் விஜி எழுந்திருக்கும் முன்னரே பிரவீன் எழுந்திருந்தான்.
அவசர அவசரமாக விஜி எழுந்து கிளம்பி அனைத்து பயிற்சி சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
பேருந்து நிறுத்தத்தில் கடலூர் செல்லும் பேருந்து முதலில் வரவே, பிரவீன் பேருந்தில் ஏறிக்கொண்டு கை அசைத்தான்.
சற்று நேரத்தில் விஜிக்கும் பேருந்து வந்தது. பிரியவே மனமின்றி தான் பிரவீன் கடலூருக்கு கிளம்பினான்.
வேலை-நண்பர்கள்-கிரிக்கெட்-அடிக்கடி விஜியுடன் சந்திப்பு-போன் பேச்சு, விடாமல் அனுப்பும் மெசேஜ் என்று பிரவீன் விஜியோடு ஒன்றியே இருந்தான். விஜியும் பிரவீனை எங்கும் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் அவனுக்காக விஜி எப்போதும் இருப்பாள் என்று நிரூபித்த வண்ணம் அவளது செயல்பாடுகள் இருந்தன.
முபாரக், ரியாஸ், விஜய் ஆகியோரும் அவ்வப்போது காயத்ரியுடனும் விஜியுடனும் ரம்யாவுடனும் பேசி பார்த்து வந்தனர்.
நர்கீஸ் எப்போதெல்லாம் விழுப்புரத்தில் தனது தாய் வீட்டிற்கு வருகிறாளா அப்போதெல்லாம் அவளது வீட்டில் விருந்து தான். விஜியின் வாழ்க்கையும் காயத்ரியின் வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாகவும் வேகமாகவும் நகர்ந்தது. பெற்றோர்களும் நன்றாக அவர்களின் நட்பை அவர்களின் கண்ணியத்தை புரிந்துகொண்டனர். அவர்களின் மேல் முழு நம்பிக்கை வைத்தனர். கடலூருக்கு விஜி பாட்டி வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் பிரவீனையும் மற்றவர்களையும் தவறாமல் சந்தித்தாள் விஜி.
மகிழ்ச்சியான நாட்கள். இப்படியே தனது வாழ்க்கை போகவேண்டும் என்று எண்ணினாள் விஜி.
மற்ற அனைவருக்குமே விஜி-பிரவீனின் அந்யோனியம் புரிந்தது. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருப்பதை உணர்ந்தனர்.
விஜியும் கூட பிரவீனிடம் தனது மனதை திறந்து பேச நல்ல காலத்தை எதிர்நோக்கி இருந்தாள். ப்ரவீனும் அங்கனமே இருந்தான். தினம் தினம் அவர்களின் மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அதீத பாச புயலானது மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே தான் இருந்தது. எப்போது கரையை கடக்கும் என்பது தான் அவர்களின் கனவு.
நாட்கள் கடக்கும் வேகம் ஒளியை விட வேகமாக போவதை போன்று இருந்தது இருவருக்கும். அப்போதெல்லாம் இருவரும் பேசிக்கொள்கிறார்களோ பார்த்துக்கொள்கிறார்களோ நேரம் போவதே தெரியாமல் இருந்தனர்.
இடை இடையே இந்த டேவிட் தான் விஜிக்கு காதல் மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான்.விஜி அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் டேவிட் மேல் இருக்கும் கோபம் மெல்ல தணிந்தது. அதற்கும் பிரவீன் தான் அறிவுரை கூறினான்.
ஒருநாள் போன் செய்யும்போது இந்த டாபிக் வந்தது. அப்போது,
"விஜி...யார் மேலயும் கோபம் இப்படி பல நாள் மனசுல வெச்சுருக்க கூடாது, இப்போ அவன் என்ன பண்ணிட்டான் னு அவன் மேல கோவம், அவனும் மனுஷன் தான், கோவப்பட்டா நரகம் தான்" என்று மீண்டும் மீண்டும் கூறி டேவிட்டுடன் ஒரு சுமூக நட்பை ஏற்படுத்தினான்.
"டேய், எப்பிடிடா இவ்ளோ நல்லவனா இருக்க, அவன் உன்னை எப்படி எல்லாம் ஹர்ட் பண்ணான், என்னால எல்லாம் இப்டி விட்டு கொடுக்கவே முடியாது டா, நீ நெஜமாவே இப்டி ஒரு கேரக்டரா இல்லன்னா இம்ப்ரெஸ் பண்ண இது டெக்கினிகா? எனக்கு ஒண்ணுமே புரியல, இப்படி கூட ஒரு மனுஷன் இந்த காலத்துல இருக்க முடியுமா, ஆனா இந்த இண்டிவிஜுவாலிட்டி தான் உன்னை திரும்ப திரும்ப நினைக்க வெக்கிது, இப்போ எல்லாம் யாரு என்ன பண்ணினாலும் அந்த செயலை நீ எப்படி ஹேண்டில் பண்ணுவ ன்னு எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன், உன்னை அடிக்கடி மீட் பண்ணனும், உன்கிட்ட நெறய ஸர் பண்ணிக்கணும் னு தோணுது, அதே சமயம் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுறேனோ, உன்னை ரொம்ப செல்பிஷா யூஸ் பண்ணறேனோ, என்னோட தேவைக்கு உன்னை கஷ்டப்படுத்தறேனோ, எந்த சம்மந்தமும் இல்லாம உன்னை உன்னோட பிரெண்ட்ஸ் கிட்ட இருந்து விளக்கறேனோன்னு எல்லாம் தோணுது டா" என்றாள் விஜி.
"ஐயோ விஜி, நீ நார்மலாவே திங்க் பண்ண மாட்டியா, ஒன்னு இந்த எக்ஸ்ட்ரீம் கு போய் யோசிக்கற, இல்ல அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போய் யோசிக்கிற, உன்னோட சிந்தனைகளும், உன்னோட முடிவுகளும் நீ உன்னை சுத்தி மட்டுமே பாத்து எடுக்கற டா, அதுவும் உன்னை கஷ்டப்படுத்தி மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறதாவே இருக்கு, நீ இன்னும் மெச்சூர்டான முடிவுகள் எடுக்கற அளவுக்கு வரல, அதுக்கு நீ காரணம் இல்ல, உன்னோட வளர்ப்பும் நீ வளர்ந்த சூழ்நிலையும் தான். எந்த முடிவுலயும் உன்னை உங்க வீட்ல கலந்துக்க விடமாட்டாங்க, உன்னோட டெசிஷன் சரியா தப்பான்னு உனக்கு யாரும் இன்டெர்ப்ரெட் பண்ண மாட்டாங்க, அதுனால நீ எடுக்கற முடிவு எல்லாம் சரியா தான் இருக்கும் னு உனக்கு நீயே ஒரு கட்டம் போட்டு வெச்சுருக்க, அதுல நீ என்னை மாதிரியே ஓவர் கான்பிடெண்டா இருக்க, அதான் உன்னோட ப்ராப்ளேம், இது சின்ன விஷயம் தான், ஆனா நீ இதை சீக்கிரம் சரி பண்ணிக்கலன்னா பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டி வரும், எந்த ஒரு விஷயத்தையும் எதையாவது இழந்த பிறகு உனரறதுல என்ன லாபம் இருக்கு விஜி, சில சமயம் இழந்த இழப்பு தற்காலிகமா இருக்கற பட்சத்துல ஓகே, அதுவே ஒரு நிரந்தர இழப்பா இருந்தா......அது உன்னை காலாகாலத்துக்கும் கில்டியா நெனைக்க வெச்சுடும், எனக்கு தெரியும், இந்த அட்வைஸ் தப்பு தான், உனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு தெரில, ஆனா இது ஒரு கசப்பான உண்மை டா, நீ புரிஞ்சுக்குவான்னு நினைக்கறேன், இனிமே ஒன்னு பண்ணு, எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அது சின்னதி பெருசா, என்கிட்டே சொல்லு, நான் சொல்றேன் நீ எடுத்தது சரியான முடிவா இல்லையான்னு" என்றான் பிரவீன்.
"டேய், இப்போ இந்த லெக்ச்சர் தேவையா, சரி சொல்றேன், இப்போ என்ன" என்றாள் விஜி.
"இப்போ நேரம் ஆச்சு நீ சாப்பிட்டு தூங்கு, பை" என்றான் பிரவீன்.
"பிரவீன்....என்னை உனக்கு புடிக்குமா டா" என்றாள் விஜி.
"இது என்ன விஜி கேள்வி, ரொம்ப பிடிக்கும், உன்னை பிடிக்கலன்னு யாராவது சொல்ல முடியுமா" என்றான் பிரவீன்.
"என்னை ஏன் உனக்கு பிடிக்கும், எவ்ளோ பிடிக்கும்?" என்றாள் விஜி.
"உன்னை ஏன் பிடிக்கும் னா, என்ன காரணம் சொல்றது, எனக்கு தெரில, ஆனா உன்னை பாத முதல் நாள், நான் டிக்கெட் குடுக்க வந்தப்போ நீ அழகா இருந்த, அந்த கருப்பு நைட்டி ல ஒரு வெள்ளை தேவதை போல, அப்புறம் உன்கூட பேசும்போது உன்னோட குரல், உன்னோட பேசற விதம், உன்னோட கோவம், உன்னோட ஸ்மைல், உன்னோட நடை, உன்னோட மெசேஜ், உன்னோட எண்ணங்கள், எல்லாமே பிடிக்கும், பிடிக்காத ஒரு விஷயம் உன்கிட்ட எதுவுமே இல்ல, முக்கியமா வீட்ல இருக்கிறவங்களுக்கு நீ குடுக்கற இம்பார்ட்டன்ஸ், அப்டியே என்னை போலவே இருக்கு டா, எவ்ளோ பிடிக்கும்னா, எனக்கு என்னை எவ்ளோ பிடிக்குமோ அதை விட அதிகம் உன்னை பிடிக்கும்" என்றான் பிரவீன்.
"சோ நைஸ் ஆப் யு டா" என்றாள் விஜி.
மௌனமாய் இருந்தான் பிரவீன்.
"நீ கேக்க மாட்டியா" என்றாள் விஜி.
"எனக்கு தெரியும் விஜி, என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும், ஏன் பிடிக்கும் எல்லாம் எனக்கு தெரியும்" என்றான் பிரவீன்.
"என்ன தெரியும், சொல்லு?" என்றாள் விஜி.
"நான் உனக்கு சொன்ன அதே பதில் தான் நீ எனக்கு சொல்லுவ இப் ஐ ஆஸ்க் தி செம் க்வெஸ்ட்டின் டு யு, ரைட் விஜி?" என்றான் பிரவீன்.
"நெஜமாவே அதான் டா உண்மை, எப்படி நீ இவ்ளோ பக்காவா திங்க் பண்ற" என்றாள் விஜி.
"அதெல்லாம் உனக்கும் போக போக வரும், இப்போ ஹுக்கு" என்றான் பிரவீன்.
"மிஸ் யு டா செல்ல பையா" என்றாள் விஜி.
"ஓஹோ, அப்டின்னா மிஸ் யு டி செல்ல குட்டி" என்றான் பிரவீன்.
இருவரும் போனை கட் செய்துவிட்டு உறங்க தயாராகினர்.
பகுதி 50 முடிந்தது.
--------------------தொடரும்---------------------