முதியோர் இல்லம்
நானும் மூனு மாசமா சொல்லிட்டு இருக்கேன்
நீங்க காதுல வாங்குறது இல்லிங்க
என்ன பிரச்சினை சொல்லு சுஜி
அந்த விவேகானந்தர் முதியோர் இல்லத்தில் உங்க அம்மா சேர்க்க சொன்னேன்
அதுவும் இது ஆடி மாசம் என்பதால் ஆடி ஆப்பர் போட்டு இருக்கங்க வெறும் 3000₹கட்டின போதும் நமக்கு 2000₹மீச்சம்'ங்க
சரி ஒகே சுஜி நாளைக்கு முதல் வேலையா அம்மாவை கூப்பிட்டு போய் சேர்த்துடுறேன் போதுமா
காலையில் முதல் வேலையாக கிளம்பினான் சக்தி
என்னங்க போன வேலையை முடிந்தா
அம்மாவை சேர்த்துவிட்டுடேன் அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டங்க இதுல ஒரு ஆச்சரியம்டா சுஜி
எங்க அம்மாவுக்கு அங்கே ஒரு பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சிடுச்சி
யாரு இந்த பக்கத்துவீட்டு லொட லொட கிழவி பங்கஜமா?
இல்ல சுஜி உங்க அம்மாவை'தான்
உங்க அண்ணன் சேர்த்துவிட்டு போனான் அதே ஆடி ஆப்பர்'ல.