என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 49
"ஏய் விஜி, நான் போயிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன், ஈவினிங் அர்ச்சனாக்கு போறோம் னு சொன்ன இல்ல" என்றாள் காயத்ரி.
"சரி டி, போ, நான் கால் பண்றேன்" என்றாள் விஜி.
"ஓகே பிரவீன், பை" என்றாள் காயத்ரி.
"ம்ம்ம், ஓகே, நான் வேணும்னா துணைக்கு வரவா" என்றான் பிரவீன்.
"ஹலோ, இது எங்க ஊரு, நீ போ டி" என்றாள் விஜி.
"ஒரு கம்பெனிக்கு....." என்றான் பிரவீன்.
"போதும்.....நிப்பாட்டு, நீ போ காயு" என்றாள் விஜி.
காயத்ரி சென்றதும், "அவளுக்கு என்ன கம்பெனி.....நான் இங்க தனியா இருக்க மாட்டேனா" என்றாள் விஜி.
"ஏய் அதான் அம்மா இருக்காங்க இல்ல" என்றான் பிரவீன்.
"உன்னை என்ன பண்றேன் பாரு" என்றபடி தொடையில் நறுக்கென கிள்ளினாள் விஜி.
"ஏய் வலிக்குது பா" என்றான் பிரவீன்.
"ம்ம்ம், நல்லா வேணும், ஆமாம் நீ என்ன பெரிய ரௌடியா, மேட்ச் னா நீ பெரிய ஆளு, செந்தில் பிரச்சனை ல நீ ஹீரோ, என் அப்பாவை மாத்தினதுல நீ ஹீரோ, உன் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் நீ ஹீரோ, நீ என்னடா அவ்ளோ பெரிய ஆளா?" என்றாள் விஜி.
"ஏன் விஜி, இப்போ இது தேவையா?" என்றான் பிரவீன்.
"இல்ல, என்னையே மிஸ் பண்ண வெச்சுட்ட இல்ல நீ, என் பேமிலிய விட உன்னை நெஜமாவே ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன், எப்போ சண்டே வரும், ஈவினிங் மெசேன்ஜர் ல உன்னோட முகத்தை பாக்கலாம் னு தோணும். அந்த அளவுக்கு நீ என்ன பண்ணின எனக்கு?" என்றாள் விஜி.
"விஜி..." என்றான் பிரவீன்.
"இந்த டேவிட் நெறையா ஈமெயில் அனுப்பினான், ஐ ஆம் சாரி, ஐ ஆம் சாரின்னு, ஆனா அவனும் பாவம் தான், என் பின்னாடியே சுத்தி சுத்தி வரான், இன் கேஸ் நான் பியூச்சர்ல டேவிட லவ் பண்ணினா....பன்றேன்னு வெச்சுக்கோ, நீ என்ன பண்ணுவ, உன்னோட ரீயாக்ஷன் என்ன" என்றாள் விஜி.
சற்றே தடுமாறினான் பிரவீன்.
"சும்மா சொல்லு டா, ஜஸ்ட் ஒரு கற்பனை தான, இது நடக்கவா போகுது" என்றாள் விஜி.
"கண்டிப்பா உன்னோட சந்தோசம் தான் என்னோட.....எங்க எல்லாரோட சந்தோஷமும். உனக்கு பிடிக்கும்ன்ற பட்சத்துல அவனே உன்னை வேணாம் னு சொன்னாலும் அவன் கைல கால் ல விழுந்தாவது உனக்கு கல்யாணம் பண்ணி வெப்போம், அதுக்கப்புறம் கண்டிப்பா அவன் உன்னை என்கூட பேச அனுமதிக்க மாட்டான், திருப்பி அனாதை ஆயிடுவேன், என் பிரெண்ட்ஸ் தான் நிரந்தரம் னு உணருவேன்.....சிம்பிள், என்ன இருந்தாலும் எனக்கு யாரும் இல்லங்கறது ஒரு நிதர்சனமான உண்மை தான விஜி, அதனால எனக்குன்னு மனசுல எந்த எதிர்பார்ப்பும் இருக்காது, இருக்கவும் விடமாட்டேன், எக்ஸ்பெக்டேஷன் ஹர்ட்ஸ் எ லாட் டா, நான் உயிரோட இருக்கறதே ஒரு பெரிய விஷயம், இதுக்கு மேல அனாதைக்கு என்ன? மத்தவங்கள சந்தோஷப்படுத்த தான் கடவுள் என்னை அனாதையா ஆகி இன்னும் வாழ வெச்சுருக்கான்" என்றான் பிரவீன்.
"ஓங்கி அறைஞ்சேன்னா பாரு, செவுள் திரும்பிடும், இந்த செண்டிமெண்ட் பேச்சு எல்லாம் வேணாம், நீ அனாதையா டா, நான் இருக்கேன், நான் என்னிக்கும் உன்னை விட்டு போகமாட்டேன், உனக்கு எப்படி என் சந்தோசம் முக்கியமோ அதுமாதிரி தான், எனக்கு உன் சந்தோசம் முக்கியம். மரணம் தான் என்னை உன்கிட்ட இருந்து பிரிக்கும், புரியுதா" என்றாள் விஜி.
"இல்ல விஜி......நீ கோவப்படாத....தெரியாம..." பிரவீன் முடிப்பதற்குள் "என்ன டா தெரியாம சொல்லிட்டேன், தெரியாம சொன்னாலும் ஹர்ட் ஆகும், தெரியாம குத்தினாலும் கத்தி உள்ள இறங்கும், இடியட்" என்றாள் விஜி.
"எனக்கும் மனசுல அந்த எண்ணம் தான் விஜி, என்னிக்கு நீ என்னை விட்டு பிரியரியோ, என்னிக்கு உன்னோட பிரிவை நான் உணரறேனோ அன்னிக்கு என் உயிர் உன்னோட கண் முன்னாடி போய்டும்" என்றான் பிரவீன்.
ஒருகணம் என்ன செய்கிறோம் என்று அறியாமல் பிரவீனை கட்டி அணைத்துக்கொண்டாள் விஜி. ஒரே வினாடி தான், பவானின் சப்த நாடிகளும் செயலிழந்துவிட்டன, என்ன செய்வதென்று அவனது மூளை அவன் உடலுக்கு ஆணை பிறப்பிக்க தவறியது. நீ இல்லன்னா நானும் இல்ல டா, என்னை விட்டு செத்துப்போய் எஸ்கிப் ஆகலாம் னு பாக்காத, நானும் உடனே உன்கூட வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணுவேன்" என்றபடி சிரித்தாள் விஜி.
சற்று நேரம் இருவரும் அமைதியாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் இருந்தனர்.
விஜி ஆரம்பித்தாள், "நீ சாவு பத்தி பேசினியா, அதான், அதை என்னால ஏத்துக்க முடில, உன்னை ஹக் பண்ணதுக்கு சாரி" என்றாள் விஜி.
"ச்ச ச்ச....நீ என் பிரென்ட் டா, நான் ஏதும் தப்பா நினைக்கல, பட் இப்டி இன்னொருவாட்டி பண்ணாத, கண்ட்ரோல் யுவர்செல்ப். இதுவும் ஒரு கற்பனை தான டா. சொல்லிட்டதுனால நீ என்ன அந்த டேவிட லவ் பண்ணிடப்போறியா, அப்படியே பண்ணினாலும் அவன் என்கூட பேசாதன்னு தடுத்தாலும் நீ பேசாம இருக்க போறியா, அப்டியே இருந்தாலும் நான் தான் முட்டாள் தனமா செத்துடுவேனா, என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை சாக விட்ருவாங்களா.......எல்லாம் ஜஸ்ட் ஒரு இமாஜினேஷன் தான் டா" என்றான் பிரவீன்.
"கடவுளே, இது இமாஜினேஷனா மட்டும் தான் இருக்கணும்" என்றாள் விஜி.
அந்நேரம் விஜியின் வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு போன் வந்தது.
"ஹலோ, யாரு பேசறது" என்றாள் விஜி.
"விஜி, நான் டேவிட் பேசறேன், நீ இன்னிக்கு ஆஸ்திரேலியாலேந்துக்கு வரேன்னு ரோஸெலின் சொன்னா, எப்படி இருக்க, நான் பலமுறை உனக்கு மேல் பண்ணினேன், பட் நீ மேல் கெக்கே பண்ணல போல, நோ ரிப்லை பிரேம் யுவர் சைட், சாரி பார் டிஸ்டர்பிங், நான் இப்போ சென்னை சதர்லேண்ட் ல ஒர்க் பண்றேன், இப்போ நான் அப்பா காசுல வெட்டியா இல்ல, அது மட்டும் இல்ல, நான் எவ்ளோ தப்பு பண்ணிருக்கேன், அந்த பிரவீனை எல்லாம் மனுஷனா கூட மதிக்காம இருந்திருக்கேன், இது எல்லாம் எவ்ளோ தப்புன்னு இப்போ புரியுது, நிஜமா உன்னை எவ்ளோ ஹர்ட் பண்ணிருக்கேன், சாரி" என்றான் டேவிட்.
விஜி மௌனமாய் இருந்தாள்.
"என்ன விஜி பேச மாற்ற, இன்னும் கோவமா?" என்றான் டேவிட்.
"கோவம் தான்" என்றாள் விஜி.
"இப்போ நான் என்ன பண்ணினா உன் கோவம் ஆறும் னு சொல்லு" என்றான் டேவிட்.
"பிரவீன் இங்க தான் இருக்கான், அவன்கிட்ட போன் தரேன், சாரி கேளு" என்றாள் விஜி.
"யாரு, யாரு சாரி கேக்கணும்?" என்றபடி ரிசீவரை வாங்கினான் பிரவீன்.
"பிரவீன், நான் டேவிட் டா, எப்படி இருக்க" என்றான் டேவிட்.
"அட, டேவிட், என்னப்பா ரொம்ப சைலண்டா பேசற, மாறிட்டியா என்ன, நீ மாறாத டா.. உன்னோட அந்த அடையாளமே அந்த கோவமும் ஆட்டிட்டுடும் தான். அது உன்னோட ஐடென்டிட்டி." என்றான் பிரவீன்.
"இல்ல டா, நான் பண்ணது எல்லாம் தப்பு தான், உன்னை விஜய் முபாரக்கை எல்லாம் ரொம்ப காயப்படுத்திட்டேன் டா" என்றான் டேவிட்.
"இல்ல டா, விடு, வெளயாட்டுன்னா ஆயிரம் இருக்கும், அதை எல்லாம் நாங்க அன்னிக்கே மறந்துருவோம்" என்றான் பிரவீன்.
"இல்ல டா, விஜியை நான் சின்சியரா லவ் பண்றேன், அவ புரிஞ்சுக்கவே மாற்றா டா, நீ தான் அவளோட நல்ல பிரென்ட், அவகிட்ட சொல்லேன், என்கிட்டே இருக்கற பணத்துக்கும் சொத்துக்கும் அவளை ராணி மாதிரி வெச்சு பாத்துக்குவேன், இன்டெர் ரிலீஜியன் னு பயப்பட வேணாம், எங்க வீட்ல நான் பர்மிஷன் வாங்கிடறேன்" என்றான் டேவிட்.
பிரவீன் அமைதியாய் இருந்தான்.
"என்ன டா, லைன் ல இருக்கியா இல்லையா" என்றான் டேவிட்.
"என்ன பிரவீன், பேசாம நிக்கிற" என்றபடி ரிசீவரை கையில் வாங்கி "ஹலோ, டேவிட், நாங்க பிசியா இருக்கோம், நான் அப்புறம் பேசறேன்" என்று சொல்லி பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை கட் செய்தாள் விஜி.
"சரியான இம்சை" என்று முணுமுணுத்தாள் விஜி.
"விஜி உனக்கு ஒண்ணு தெரியுமா, நீ ஆஸ்திரேலியா ல இருந்தப்போ, ரம்யா அவளோட காலேஜ் ல பர்ஸ்ட் இயர் கல்ச்சுரல்ஸ் ல ஒரு டிராமா போடணும் னு சொன்னா, நானும் தீம் சொன்னேன், பட் அவளுக்கு புரியல, அப்புறம் நானும் விஜய்யோட தம்பி கார்த்திக் இருக்கான் இல்ல? அவனும் நைட் சென்னை போய், ரம்யாவோட பிரென்ட் பூமான்னு ஒரு பொண்ணு வண்டலூர் ல இருக்கா, அவளோட க்ளாஸ்மேட் போல, அவ வீட்ல அவளுக்கும் அவளோட கூட நடிக்கிற பிரெண்ட்ஸ்க்கும் ஸ்க்ரிப்ட் குடுத்துட்டு ரிகர்சல் பாத்துட்டு கார்த்திக்கை மட்டும் சென்னை ல தங்கி நாடகம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வர சொல்லி இருந்தேன், நவீன திருவிளையாடல் கான்செப்ட். சிவன் அண்ட் பார்வதி இந்த காலத்துல இருந்திருந்தா எப்படி லவ் பண்ணிருப்பாங்க எப்படி டூயட் பாடி இருப்பாங்கன்னு ஒரு கற்பனை ஸ்டோரி. ரம்யா தான் சிவன் வேஷம் போட்டா, நம்ம கார்த்திக் தான் எல்லாருக்கும் மேக்கப் போட்டு விட்டுருக்கான். செம்மயா இருந்துச்சாம், ரம்யாவும் அவளோட பிரென்ட் சத்யாவும் சிவன் பார்வதி ரோல் ல கலக்கிட்டாங்களாம். பூமாங்கற பொண்ணு அவ்வயாரா வந்து செம கலாய், ரம்யாகிட்ட கேட்டு பாரேன்" என்றான் பிரவீன்.
"அப்படியா, நான் பேசும்போது கேக்கறேன், அந்த லூசு சொல்லவே இல்ல இதை, நீ கூட இப்போ தான் சொல்ற" என்றாள் விஜி.
"இது என்ன பெரிய விஷயமா' என்றான் பிரவீன்.
நேரம் போவதே தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருக்க, புவனா தூங்கி எழுந்து வந்தாள்.
"என்ன, ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கலாம் இல்ல" என்றாள் புவனா.
"இல்லம்மா, எதுவும் ப்ராப்லம் இல்ல, தூக்கம் வரல" என்றாள் விஜி.
"சரி, அப்பா போன் பண்ணாரா?" என்று புவனா கேட்டுக்கொண்டிருக்கும்போதே விஜியின் அப்பா லேண்ட் லைன்க்கு போன் செய்தார்.
"ஹலோ...." என்றாள் விஜி.
"ஏய், என்ன...அம்மா போன் உன்னோட போன் எல்லாமே ஆப் ல இருக்கு, ஆன் பண்ணுங்க முதல்ல" என்றார் விஜியின் தந்தை.
"சரிப்பா, சார்ஜ் இல்ல அதான், அம்மா அந்த போனை சார்ஜ் ல போட்டு ஆன் பண்ணு, நீங்க சொல்லுங்கப்பா" என்றாள் விஜி.
"ஒரு ஹாப் அன் ஹவர் கு அப்புறம் நீங்க வளவனூர் ல இருந்து கிளம்புங்க. ஓகே?" என்றார் விஜியின் தந்தை.
"சரிப்பா" என்றபடி போனை கட் செய்துவிட்டு
"அம்மா, பிரவீன், இன்னும் அரை மணி நேரத்துல கெளம்பணுமாம்" என்றபடி போனை எடுத்து காயத்ரிக்கு டயல் செய்தாள் விஜி.
பகுதி 49 முடிந்தது.
----------------------தொடரும்---------------------