கண்ட நாள் முதலாய்-பகுதி-22

.....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 22

அரவிந்தனிடமிருந்து வந்து கொண்டிருந்த அழைப்புகளை எடுப்பதா வேண்டாமா என குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான் அர்ஜீன்...

"இப்போ இவனோட கோலை அட்டென்ட் பண்ணா கேள்வி மேல கேள்வியா கேட்டு துளைச்சு எடுத்திடுவானே...இவனுக்கு எப்பவுமே என்னோட காதல் தெரியக் கூடாது...நல்ல வேளை அன்னைக்கு நம்மள துளசி பார்க்கல.."என்று அவன் மனம் எண்ணிக் கொள்ளும் போதே மனதோரமாய் ஓர் வலி ஏற்படுவதை அவனால் உணர முடிந்தது...அப்படியே இருக்கையில் கண் மூடிச் சாய்ந்தவன் அரவிந்தனின் கோலை எடுத்து பேசத் தொடங்கினான்...

"ஹலோ...ரொம்ப சொரிடா அரவிந்...ஒரு சின்ன பிரச்சினை..அதான் திடீர்னு அங்கேயிருந்து கிளம்ப வேண்டியதா போச்சு...யார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பவும் நேரம் கிடைக்கலை...நாளைக்கு மோர்னிங் வந்திடுவேன்டா...அதுவரைக்கும் நீ தான் வீட்டில எல்லாரையும் சமாளிச்சாகனும்..."

"என்னடா ஆச்சு..??இப்போ நீ எங்க இருக்கிறாய்..?."

"என் ப்ரண்ட் ஆகாஷ் தெரியும்ல உனக்கு...அவனுக்கு அக்சிடென்ட் ஆயிட்டுது...ப்ளட் தேவை என்டதால நான் உடனே அங்கேயிருந்து கிளம்ப வேண்டியதா போச்சு...சொரிடா..."

"இப்போ எதுக்கு வார்த்தைக்கு வார்த்தை சொரி கேட்டிட்டு இருக்காய்...உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா...?இப்போ ஆகாஷ்க்கு எப்படி இருக்கு..?எந்த கொஸ்பிற்றல்னு சொல்லு நான் வாறன்..

"இப்போ ஒகேடா....ஒன் வீக் ல வீட்டை போகலாம்னு சொல்லிட்டாங்க...நீ இப்போ இந்த நேரம் கிளம்பி வந்த எல்லாரும் என்ன நினைப்பாங்க...?அதான் நான் அவன் பக்கத்திலேயே இருக்கனே...மோர்னிங் நானே வந்திடுவேன்...நீ இதைபத்தி ஒன்னும் யோசிக்காம உன்னோட கல்யாண வாழ்க்கையை இனிமையா தொடங்கு..."

"ம்ம்...சரி டா....ஏதாவது சாப்பிட்டியா...?

"அதெல்லாம் நல்லாவே சாப்பிட்டேன்...நீ வீட்டில எல்லோரையும் சமாதானப்படுத்தி வைச்சிக்கோ....அப்புறம் காலையில என்னை அடிச்சு துரத்தினாலும் துரத்திடப் போறாங்க..."

"ஹா....ஹா....முதல் அடி என்னோடதுதான்டா..."

"அடப்பாவி...!!!"

"சரிடா....நீ கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடு....மோர்னிங் பார்க்கலாம்..."

"ஓகேடா..."என்றவாறே அரவிந்தனுடனான அழைப்பினை முடித்துக் கொண்ட அர்ஜீனுக்கு முதன் முறையாக அவனிடம் பொய்யுரைத்ததை நினைத்து கவலையாக இருந்தது...ஆகாஷ்க்கு உண்மையிலேயே ஒரு மாதத்திற்கு முன்பாக அக்சிடென்ட் ஆகியிருந்ததால் அதையே சொல்லி ஒருவழியாக சமாளித்திருந்தாலும்....அவனை நேரில் பார்த்தால் அனைத்தையும் உளறிவிடுவோமோ என்ற பயமும் அவனுள் எழுந்தது...அனைத்தையும் யோசிக்க யோசிக்க அவனது தலையே வெடித்துவிடும் போல் இருந்தது..சிறிது நேரம் அப்படியே சீட்டில் சாய்ந்திருந்தவன் காரை ஸ்டார்ட் செய்து கொண்டு புறப்பட்டான்..

இங்கே அறையில் ஓய்வெடுப்பதற்காக தனித்து விடப்பட்டிருந்த துளசியோ அவளது கழுத்தினில் இருந்த மாங்கல்யத்தையே தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்...என்னதான் சமாதானங்களைச் சொல்லி அவள் தன் மனதை ஆறுதல்படுத்திக் கொண்டாலும் மனதின் ஓரமாய் ஏற்படும் வலியினை அவளால் மறைத்துக் கொள்ள முடியவில்லை...பூட்டிய அறைக்குள் இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை போதும் போதும் என்ற வரை அழுது தீர்த்தாள்...கண்ணீர் கண்களில் வழிந்து காயும் வரை பலவற்றை மாறி மாறி சிந்தித்தவள் குளியலறை சென்று முகத்தை கழுவிவிட்டு வந்தாள்...

அவளது மனம் இப்போது ஒரு முடிவிற்கு வந்திருந்தது...இரட்டை மனக் குழப்பத்தோடு புதிய வாழ்க்கையை வாழ அவள் மனம் இடம் கொடுக்கவில்லை...அவள் இந்த உறவை உண்மையாகவும் நேர்மையாகவும் ஆரம்பிக்கவே விரும்பினாள்...தனது பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக ஆரம்பத்தில் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தாலும் திருமண ஏற்பாடுகள் தாமதமாகவே நடைபெறுமென்று எண்ணியிருந்ததால் தனது மனதை ஓரளவுக்கு மாற்றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை அவளுள் இருந்தது...ஆனால் அனைத்தும் வேக வேகமாகவே நடைபெற்று முடிந்ததில் அவள் உள்ளுக்குள் மிகவும் உடைந்து போயிருந்தாள்....

அவளது மனம் ஒருநிலையின்றி தவித்துக் கொண்டிருந்தது...இந்தக் குழப்பங்களை மனதில் சுமந்து கொண்டு அரவிந்தனிடம் நாடகமாட அவள் விரும்பவில்லை...அதே நேரம் தன் மனதில் இருக்கும் வலிகளையும் அவனிடம் பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு இஷ்டமில்லை...அவளது மனதை முழுமையாக அவன் பக்கமாய் திருப்புவதற்கு அவளுக்கு சிறிது காலம் தேவைப்பட்டது...அதை அவனிடமே நேரடியாகக் கேட்டு விடுவதென்று முடிவு செய்து கொண்டாள் துளசி...என்ன நடந்தாலும் இன்று அவனிடம் தெளிவாக இது தொடர்பில் கதைத்துவிட வேண்டுமென்று முடிவு செய்த பின்னால்தான் துளசியால் ஓரளவுக்கு நிம்மதியாகவே இருக்க முடிந்தது...

தனது அறைக்குள் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்த அரவிந்தனுக்கு எப்போது அவள் வருவாள் என்ற ஏக்கமே அதிகமாய் இருந்தது...அன்று கடிகாரம் கூட மெதுவாகவே சுழல்வதாகத் தோன்றியது அவனுக்கு...அவளிடம் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல விடயங்கள் இருந்தது அரவிந்தனிடம்...நகர்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு விநாடிகளையும் மிகவும் கஸ்டப்பட்டே தள்ளிக் கொண்டிருந்தான் அவன்...புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் அவர்கள் வாழ்க்கையை நினைத்து பல கற்பனைக் கோட்டைகளை அவன் மனம் அழகாக வடிவமைத்துக் கொண்டிருந்தது...ஆனால் அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை...அனைத்தும் ஒரு நொடியில் உடைந்து நொறுங்கி விடப்போகிறதென்று...

இருவரும் வேறுபட்ட மனநிலையோடே வரப் போகும் இரவிற்காய் காத்திருக்கத் தொடங்கினார்கள்...நேரம் அதன் போக்கில் ஓட அவர்கள் எதிர்பார்த்த நேரமும் வந்தது...துளசியை உறவுக்காரப் பெண்கள் கேலி செய்தவாறே அலங்கரிக்கத் தொடங்கினார்கள்...ஆனால் அவர்களின் கேலியான பேச்சுக்களை காது கொடுத்தும் கேட்கும் நிலையில்தான் அவள் இல்லையே...அவர்கள் தங்கள் போக்கில் அவளைக் கேலி செய்ய அவளோ அவனிடம் எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தாள்...முடிவினை இலகுவாக எடுக்க முடிந்த அவளால் அவனிடம் அதை எப்படிச் சொல்வதென்றுதான் தெரியவில்லை...அதையே யோசித்தபடி அவள் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து அவளைத் தயார்ப்படுத்தி முடித்திருந்தனர்...

"அண்ணி கொஞ்ச வெட்கத்தை மிச்சம் வையுங்க...அப்புறம் அண்ணனுக்கு உங்க வெட்கத்தை பார்க்கிற பாக்கியம் கிடைக்காமலே போயிடப் போகுது..."

அவள் தலையைக் குனிந்து கொண்டு யோசித்ததை வெட்கம் என்று நினைத்து அர்ச்சனா கேலி செய்ய மற்றப் பெண்களும் அவளோடு இணைந்து துளசியை ஓட்டத் தொடங்கினார்...அந்தக் கேலி கிண்டலில் இருந்து அவளைக் காப்பற்றவென்றே அரவிந்தனின் அம்மா வந்து சேர்ந்தார்கள்....

"என்னடி எல்லாரும் என் மருமகளை கேலி பண்ணிட்டு இருக்கீங்க...?.."

"என்ன அம்மா...உங்க மருமகளுக்கு சப்போர்ட்டா...?"

"என் மருமகளுக்கு நான் சப்போர்ட் பண்ணாம வேற யாருடி பண்ணுவா..."?

"அட பார்ரா...நீங்க இப்படி பண்ணா...நாங்க எப்படி மாமியார் மருமகள் சண்டையை பார்க்குறதாம்...?"

"அதைதான் எல்லா சனல்லையும் மாறி மாறி காட்டுறாங்காளே போய் பாரு....எனக்கு நீ எப்படியோ அப்படித்தான்டி துளசியும்..."

"அம்மான்னா அம்மாதான் சோ ஸ்வீட்..எல்லாரும் உன்னை மாதிரியே இருந்திட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்"

"போதும்டி ரொம்ப ஐஸ் வைக்காத...போய் அரவிந்தன் ரெடியான்னு பாரு..."

"அதெல்லாம் அவன் எப்பவோ ரெடி ஆகியிருப்பான்..."என்றவாறே அரவிந்தனைத் தேடிப் போனாள் அர்ச்சனா...அர்ச்சனாவோடே மற்றைய உறவுப் பெண்களும் செல்ல...அரவிந்தனின் அம்மா துளசிக்கு திருஷ்டி கழித்தார்...அதன் பின் துளசியின் தொலைபேசி மணி அடிக்க அவளுக்கு பேசுவதற்காய் தனிமையைக் கொடுத்து விலகிச் சென்றார்...கலைவாணிதான் அழைத்து சில பல இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்...அவர் சொன்ன அனைத்திற்கும் "ம்" கொட்டியவள்...அழைப்பினை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்...

வெளியே வந்தவளை அர்ச்சனா அரவிந்தனின் அறையை நோக்கி அழைத்துச் செல்ல துளசியின் மனமோ படபடக்கத் தொடங்கியது...அவனது அறையை நெருங்க நெருங்க அவளது உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது...

அவளோ அவனிடம் தன் நிலையினை எப்படி விளக்குவது என்ற சிந்தையோடு அறைக்குள் நுழைய...அவனோ ஆயிரம் கனவுகளோடு அவளுக்காய் காத்திருக்க...காலம் அவர்களுக்காய் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது...



தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (20-Sep-17, 9:43 pm)
பார்வை : 539

மேலே