என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 48

சிட்னியில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு காலை பத்து மணிக்கு வந்து சேரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்தடைந்தனர் இருவரும்.

ஏர்போர்ட்டில் பிரவீன், ரியாஸ், முபாரக், நர்கீஸ், அவர்ளின் குழந்தைகள், விஜியின் தந்தை, ரம்யா, காயத்ரியின் தந்தை அனைவரும் காத்திருக்க, வெளிநாட்டு பயணம் போய் வரும் இந்தியர்களுக்கே உரிய தோற்ற மாற்றங்களுடன் இருவரும் வந்தனர். ஜீன்ஸ் பேன்ட்டும் டீஷர்ட்டும் கழுத்தில் ஒரு துணிக்கட்டும், உதட்டு சாயமும், கர்லிங் செய்யப்பட்ட முன்னந்தலையும், ட்ரிம் செய்யப்பட்ட புருவங்களும், லீ கூப்பர் காலணியும்.....ஏதோ வெளிநாட்டுகாரிகள் வருவது போல வந்தனர் இருவரும். கண்களில் போலீஸ் குளிர் கண்ணாடி பளபளத்தது.

தங்கள் லக்கேஜ் முழுதும் அனைவருக்கும் கொடுப்பதற்காக வாங்கி வரப்பட்ட பொருட்கள். ரம்யா அவர்களை சந்தித்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு சென்னை கல்லூரியின் விடுதிக்கு சென்றுவிட்டாள். பிறகு அனைவரும் ரியாஸ் கொண்டுவந்திருந்த டெம்போ டிராவெலரில் ஏறி விழுப்புரம் நோக்கி பயணித்தனர்.

விஜிக்கும் ப்ரவீனுக்கும் இடையே ஒரு இனம்புரியாத சந்தோசம். ஏதோ தொலைந்த வைர புதையல் திரும்ப கிடைத்தது போன்ற ஒரு உணர்வு.

விழுப்புரம் அடைந்ததும் அனைவருக்கும் தாங்கள் வாங்கி வந்த பொருட்களை கொடுத்து சந்தோஷப்பட்டனர் இருவரும். முபாரக்கிற்கு விலை உயர்ந்த வாசனை திரவியங்களும் ஆடைகளும் நர்கீஸுக்கு பிளாட்டினத்தில் ஒரு டாலரும் என விலை உயர்ந்த பொருட்களை பரிசளித்தனர்.

சற்று நேரத்தில் ரியாஸ், முபாரக், நர்கீஸ் மற்றும் அவர்களின் பிள்ளைகள், தாம் வந்த டெம்போ டிராவெலேரில் கிளம்பினர்.

"டேய் முபா, நீங்க கிளம்புங்க, நான் விஜி கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நைட் வந்துடறேன், இல்லன்னா விழுப்புரம் ல தங்கிட்டு நாளைக்கு காலைல வரேன்." என்றான் பிரவீன்.

"சரி டா" என்று கிளம்பினர் அனைவரும்.

"ஏன் டா விழுப்புரம் ல தங்கணும், எங்க வீட்ல ஸ்டெ பண்ணிடு, நாளைக்கு மானிங் போலாம், நானும் நாளைக்கு ட்யூட்டில ஜாயின் பண்ணனும் பாண்டிச்சேரி ல, அங்க போனாதான் தெரியும், எந்த ஊருக்கு போடறாங்கன்னு" என்றாள் விஜி.

"உன் வீட்ல...." என்று பிரவீன் முடிப்பதற்குள் "என்னப்பா, பரவால்ல, நைட் தங்கிட்டு காலைல போகலாம், நான் ஸ்டேஷனுக்கு போயிட்டு பர்மிஷன் வாங்கிட்டு அர்ச்சனா கு வரேன், நான் போன் பண்ணதும் நீங்க ஈவினிங் வீட்ல இருந்து கிளம்பி வாங்க, ஒரு நல்ல டின்னர் சாப்பிடலாம், ஓகே?" என்றார் விஜியின் தந்தை.

"ஓகே பா, ரொம்ப தேங்க்ஸ்" என்றபடி தந்தைக்கு முத்தமிட்டாள் விஜி."நான் காயத்ரியையும் கூட்டிட்டு வரேன் பா" என்றாள் விஜி.

விஜியின் தந்தை வேலைக்கு கிளம்பினார். புவனாவும் வந்த களைப்பில் "நான் கொஞ்சம் கட்டையை நீட்டறேன், ரொம்ப டயர்டா இருக்கு" என்றபடி தூங்க சென்றாள்.

பிறகு விஜி தனது மற்றொரு லக்கேஜ் பேக்கை திறந்தாள். அதில்,

ரம்யாவுக்கு ஆர்.எம். வில்லியம்ஸ் "இயர்லிங்ஸ்" செல்சி பூட்ஸ் வாங்கி வந்திருந்தாள் விஜி. ப்ரவீனுக்காக "பாரெவர்.....வித் யு" என்று பொறிக்கப்பட்ட அவனுக்கு விருப்பமான கருப்பு நிற டீசர்ட் மற்றும் யூ.ஜி.ஜி. பூட்ஸும் வாங்கி வந்திருந்தாள். மேலும் பிரவீன் - விஜி என்று வெள்ளி டாலர் போட்ட வெள்ளி சங்கிலியும் அளித்தாள்.

ப்ரவீனுக்கு மிகவும் மகிழ்ச்சி. பிரவீன் விஜய்க்காக ஒரு அன்பளிப்பு வைத்திருந்தான். அது தங்கத்தில் விஜி-பிரவீன் என்று டாலர் இடப்பட்ட சங்கிலியை கொடுத்தான்.

"பிரவீன், இதை நான் எப்படி போட்டுப்பேன், எல்லாரும் பாப்பாங்க, இதுல உன்னோட பேரு இருக்கு டா" என்றாள் விஜி.

"ஏன் விஜி, நீ கூட தான் எனக்கு உன்னோட பேர் போட்டு செயின் குடுத்த, நான் சந்தோஷமா போட்டுக்குவேன் டா" என்றான் பிரவீன்.

"நீ ஆம்பள டா, உனக்கு எந்த ப்ராபளமும் இல்ல ஆனா நான்...." என்றாள் விஜி.

"கழுத்துல தொங்கப்போகுது, ட்ரஸ்க்குள்ள மறஞ்சுடும் டா, ப்ளீஸ்" என்றான் பிரவீன்.

"டேய், உன்ன போல தனியா வீட்ல இருந்தா பரவாயில்ல, எனக்கு அப்பா அம்மா ரம்யா எல்லாரும் இருக்காங்க, பாட்டி வீட்டுக்கு வந்தா அங்க பாட்டி மாமா எல்லாரும் இருக்காங்க, எப்படி இருந்தாலும் அவங்க கண்ணுல படும் டா" என்றாள் விஜி.

"என்ன விஜி, எனக்கு யாரும் இல்லை னு இண்டெரெக்ட்டா சொல்ற" என்றான் பிரவீன்.

"ஐயோ, அப்டி இல்ல டா செல்லம், வீட்ல எல்லாரும் தப்பா நெனச்சாங்கன்னா அப்புறம் நான் உன்னை மீட் பண்றதுல நெறையா பிராபளம் வரும், அதான், என்னை பாக்காம உன்னால இருக்க முடியுமா? முடியாது இல்ல, அது மாதிரி தான் உன்னை பாக்காம என்னால இருக்க முடியாது. இதை நான் வெச்சுக்கறேன், உன்னை மீட் பண்ண வரும்போது மட்டும் போட்டுக்கறேன், மத்த நேரத்துல என்னோட வாலட் ல இருக்கட்டும், இப்போ சன்தோஷமா?" என்றாள் விஜி.

"ம்ம்ம், சரி, நானும் உங்க வீட்டுக்கு வரும்போதோ உன்னோட பேமிலி ஆளுங்கள பாக்கும்போதோ இந்த செயின் தெரியாம பாத்துக்கறேன்." என்றான் பிரவீன்.

ப்ரவீனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த விஜி, மெல்ல அவன் கையை பிடித்து தனது கன்னத்தில் வைத்துக்கொண்டாள். அவன் தொழில் சாய்ந்தபடியே, "இந்த ஒம்போது மாசம் உன்னை நேர்ல பாக்க முடியாம எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா, எல்லோராவிட உன்னை தான் அதிகம் மிஸ் பண்ணினேன் டா, உன்கிட்ட பேசும்போது தான் நான் சந்தோஷமா இருந்தேன், எவ்ளோ தனிமையா பீல் பண்ணினேன் தெரியுமா" என்றாள் விஜி.

அவளது கண்கள் கலங்கி அவனது தோளை நனைத்தது.

"விஜி, எதுக்கு அழற இப்போ, அதான் வந்துட்ட இல்ல, அது மட்டும் இல்ல, நீ ஆஸ்திரேலியா போயிட்டு வந்திருக்க, எவ்ளோ பெருமையான விஷயம் தெரியுமா" என்றான் பிரவீன்.

"இல்ல டா. உன்னோட இருக்கறது, உங்க பிரெண்ட்ஸோட பாசம் எல்லாம் தான் பெரிய விஷயம்" என்றாள் விஜி.

"ஹே, என்ன பேசற நீ, நாங்கல்லாம் லோக்கல் டா, எங்களுக்கு இந்த தமிழ்நாட விட்டா எந்த இடமும் தெரியாது." என்றான் பிரவீன்.

"பொய் சொல்ற பிரவீன் நீ, எனக்கு தெரியும், ஒருநாள் நான் முபாரக் அண்ணா கிட்ட பேசும்போது சொன்னாரு, உனக்கு கனடா ல ஒரு கான்செர்ன் ல லெப் டெக்னீஷியன் கம் பயோகெமிஸ்ட்டா வேலை கெடச்சுது, அந்த வேலையே வேணாம் னு சொல்லிட்ட, ஏன் னா உனக்கு உன்னோட அம்மா கூட இருக்கணும் உன்னோட பிரெண்ட்ஸ் கூட இருக்கணும், அதேமாதிரி முபாரக் அண்ணனுக்கு துபாய் ல வேலை கெடச்சுது, அண்ணன் அதை வீட்ல கூட யாருக்கும் சொல்லாம போகாம விட்டுட்டாரு, எல்லாம் தெரியும் பிரவீன். எல்லா வசதி இருந்து படிச்சு ஆஸ்திரேலியா போற என்னைவிட கஷ்டப்பட்டு படிக்கிற சூழ்நிலை கொஞ்சம் கூட இல்லாம கவர்மெண்ட் ஸ்கூல் ல படிச்சு....நீ தான் டா கிரேட். என்னோட ரோல் மாடல் டா நீ" என்றாள் விஜி.

"விஜி, எனக்கு இந்த புகழாரம் தேவையா" என்றான் பிரவீன்.

"உண்மைய தான டா சொல்றேன்" என்றாள் விஜி.

"சரி விஜி, அம்மா வந்துர போறாங்க, நீ நகர்ந்து உக்காரு, ப்ளீஸ்" என்றான் பிரவீன்.

"அம்மாக்கு ஆல்ரெடி நம்ம லவ் பண்றோமான்னு டவுட் இருக்கு, ஒருநாள் என்கிட்டே இண்டெரெக்ட்டா கேட்டாங்க" என்றாள் விஜி.

"அதுக்கு நீ என்ன சொன்ன விஜி?" என்றான் பிரவீன். சற்றே திகிலானான்.

"அம்மா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா, உங்க பேச்சை மீற மாட்டேன் மா, உங்க நம்பிக்கையை கெடுக்க மாட்டேன், எல்லாத்துக்கும் மேல நானே அப்படி ஒரு எண்ணத்துல இருந்தாலும் பிரவீன் உங்களுக்கு எதிரா எந்த செயலும் செய்யமாட்டான் அம்மா, அவன் என் சந்தோசம் தான் முக்கியம் னு இருக்கற ஒரு பெஸ்ட் பிரென்ட் னு சொன்னேன், சரி தான பிரவீன்?" என்றாள் விஜி.

பிரவீன் செய்வதறியாது "ஆமாம், சரியா சொன்ன விஜி நீ" என்றான்.

அந்நேரம் காயத்ரி உள் வர,

"வாடி, ஈவினிங் அர்ச்சனால டின்னர், என் அப்பா ஸ்பான்சர்" என்றாள் விஜி.

"ம்ம்ம், ஓகே டி, நோ ப்ராப்ளேம், என்ன பிரவீன் இங்கயே இருக்காரு, கடலூர் போகலையா" என்றாள் காயத்ரி.

"நாளைக்கு காலைல தான் போறான்" என்றாள் விஜி.

"ஓ, போறான் வாரான்......வாடா போடா னு கூப்பிட ஆரம்பிச்சுட்டியா பிரவீனை?" என்றாள் காயத்ரி.

அப்போது தான் உணர்ந்தாள் விஜி, "ஏன் நாம் பிரவீனை உரிமையோடு ஒருமையில் கூப்பிட ஆரம்பித்தோம், என்ன மாற்றம் இது" என்று எண்ணிக்கொண்டாள்.

"என்ன டி யோசிக்கற" என்றாள் காயத்ரி.

"இல்ல பரவால்ல காயத்ரி, அப்டி சொல்றதுனால தப்பு இல்லை, நீ கூப்பிடு விஜி, உனக்கு உரிமை இருக்கு" என்றான் பிரவீன்.

"ஓஹோ, அப்டின்னா எனக்கும் உரிமை இருக்கு தான, நானும் உங்களை அப்டி கூப்பிடட்டுமா?" என்றாள் காயத்ரி.

"ஓ, தாராளமா" என்றான் பிரவீன்.

"சரி டா" என்றல் காயத்ரி.

"இவ்ளோ சீக்கிரமா ஒரு மாற்றத்தை நான் எதிர்பாக்கல காயத்ரி" என்று சிரித்தான் பிரவீன்.

காயத்ரியும் சிரித்தாள்.

ஆனால் விஜி மட்டும் இன்னும் சிந்தனையில் இருந்தாள். "ஆமாம், ஏதோ ஒரு மாற்றம், பிரவீனை மிஸ் பண்ணேன் னு அவன் தோள்மேல சாஞ்சுகிட்டு நான் ஏன் சொல்லணும், முதல்ல நான் ஏன் அவனை ரொம்ப மிஸ் பண்ணனும், அம்மா கேட்ட மாதிரி நான் பிரவீனை லவ் பண்ணறேனா" என்று தீவிரமாக யோசித்தாள் விஜி.

"என்ன டி, என்ன யோசிக்கற, தலை வலிக்குதா" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, நத்திங்" என்றாள் விஜி.

"அம்மா எங்க, தூங்க போய்ட்டாங்களா" என்றாள் காயத்ரி.

"ஆமாம் டி, டயர்டா இருக்குன்னு தூங்க போய்ட்டாங்க" என்றாள் விஜி.

"பிரவீன், முபாரக் அண்ணா பசங்க நல்லா க்யூட்டா இருக்காங்க இல்ல? ஆனா செம வாலுங்க" என்றாள் காயத்ரி.

"அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்குங்க" என்றான் பிரவீன்.

"சரி டி, நான் வீட்டுக்கு போயிட்டு ஈவினிங் வரேன், அர்ச்சனாகு போகலாம்" என்றபடி கிளம்பினாள் காயத்ரி.

"இரு காயத்ரி, போலாம், கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்" என்றாள் விஜி.

அந்த நேரம் ரம்யா ப்ரவீனுக்கு கால் செய்ய, நெட்ஒர்க் சரி இல்லாமல் குரல் சரியாக காதில் விழவில்லை ப்ரவீனுக்கு. சற்றே வெளியில் வந்து பேசினான்.

"என்ன பிரவீன்....பத்திரமா போய் சேந்திங்களா, அம்மா போன் அக்கா போன் ரெண்டும் ஆப்ல இருக்கு, அதான் உங்களுக்கு போன் பண்ணினேன், எங்க இருக்கீங்க இப்போ" என்றாள் ரம்யா.

"உங்க வீட்ல தான் ரம்யா, நாளைக்கு தான் கிளம்பறேன்" என்றான் பிரவீன்.

"ஓ அப்டியா, எல்லாரும் தங்கறாங்களா" என்றாள் ரம்யா.

"இல்ல, நான் மட்டும் தான்" என்றான் பிரவீன்.

"ஓகே, நான் அப்புறம் பேசறேன், பை" என்றபடி போனை கேட் செய்தாள் ரம்யா.

இதற்கிடையே உள்ளே....

"என்ன டி ரொம்ப சிந்தனையா இருக்க, உன் முகம் சரி இல்லையே, என்ன குழப்பம் உனக்கு" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, நாம ஆஸ்திரேலியால இருந்தப்போ அடிக்கடி அம்மா கிட்ட பேசும்போது பிரவீன் அப்டி சொன்னான், இப்டி சொன்னான், அதா பண்ணினான் இதை பண்ணினான் னு நெறய சொல்லிருக்கேன், அப்போ ஒருநாள் அம்மா என்கிட்டே பிரவீனை நீ லவ் பண்றியான்னு கேட்டாங்க, நான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன், அப்புறம் நான், அம்மா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா, உங்க பேச்சை மீற மாட்டேன் மா, உங்க நம்பிக்கையை கெடுக்க மாட்டேன், எல்லாத்துக்கும் மேல நானே அப்படி ஒரு எண்ணத்துல இருந்தாலும் பிரவீன் உங்களுக்கு எதிரா எந்த செயலும் செய்யமாட்டான் அம்மா, அவன் என் சந்தோசம் தான் முக்கியம் னு இருக்கற ஒரு பெஸ்ட் பிரென்ட் னு சொன்னேன்,
ஆனா இப்போ எனக்கே என்ன தோணுதுன்னா, நான் ஏன் அவனை இவ்ளோ மிஸ் பண்ணேன், அவன்கிட்ட சொல்லி அழுதேன் டி இப்போ, உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் னு" என்றாள் விஜி.

"என்ன டி சொல்ற, விஜி, தெளிவா பேசு, ஆனா பிரவீன் வந்துடப்போறாரு, சீக்கிரம் சொல்லு, உன் மனசுல என்ன இருக்கு" என்றாள் காயத்ரி.

"குழப்பமா இருக்கு டி, அவனை லவ் பண்ணறேனா தெரில, அதுமட்டும் இல்ல, அவன் எப்படி பழகறான் னு தெரில, ஒரு விஷயம் டி, என் அப்பா அம்மா ரம்யா கு எந்த பாதிப்பும் வரக்கூடாது, அது மட்டும் தான் என் மனசுல ஓடுது டி" என்றாள் விஜி.

"ஏய், உனக்கு புடிச்ச லைப்....வேணாம்னு யாரு டி சொல்ல போறாங்க, நீ தெளிவா ஒரு முடிவெடுத்து சொல்லு, என்னன்னு" என்றாள் காயத்ரி.

"இல்ல டி, நான் இப்டி ஏதாவது தப்பு பண்ணினா, அது என் தங்கை ரம்யா கல்யாணத்துல பிரச்சனை குடுக்கும் டி, இல்ல, இப்போ இதை பத்தி நான் ஏதும் யோசிக்கல, இப்போ வரைக்கும் அவன் என் பிரென்ட் தான், நீ எனக்கு எப்டியோ அப்டி தான் அவனும்" என்றாள் விஜி.

"ம்ம்ம், ஏய்....பிரவீன் வராரு, பேச்சை மாத்து" என்றாள் காயத்ரி.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிரித்துக்கொண்டே "ரம்யா கால் பண்ணா, உங்க போன் ஆப்ல இருக்காம், வந்து சேந்தாச்சானு கேட்டா" என்றான் பிரவீன்.

பகுதி 48 முடிந்தது.

-------------தொடரும்---------------

எழுதியவர் : ஜெயராமன் (20-Sep-17, 2:29 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 282

மேலே