என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 51

மேலும் ஒரு வருடம் மிக வேகமாக கழிந்தது. விஜி பிரவீன் இடையே இருந்த அந்த ஒரு பிணைப்பு மேலும் மேலும் அதிகரித்தது. எந்த தடைகளும் இன்றி இருவரும் சந்திப்பது, போன் பேசிக்கொள்வது என்று காலம் நகர்ந்தது.

விஜியும் தனது வேலையில் நன்றாக திறமையை வெளிக்காட்டினாள். காயத்ரியும் நல்ல முறையில் பணிகளை தொடர்ந்தாள். டேவிட்டுடன் விஜியின் பேச்சுவார்த்தை சற்றே சுமூகமாக இருந்தது. ஆனால் டேவிட் அடிக்கடி காதலை ப்ரபோஸ் செய்வதை குறைத்துக்கொண்டு நல்ல முறையில் பழக ஆரம்பித்தான்.

ரம்யாவுக்கு கல்லூரி காலம் முடிந்தது. அவளும் இறுதி தேர்வுக்காக தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாள். ப்ரவீனும் தனது வேலையில் ப்ரமோஷன்கள் வாங்கி உதவி மேலாளராக இருந்தான். முபாரக் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தான். விஜய் ரியாஸ் மற்ற அனைவருமே அவர்கள் வேலையில் பிஸியாகவும் அதே நேரத்தில் சனி ஞாயிற்று கிழமைகளில் கிரிக்கெட்டும் பல டோர்னமெண்ட்களில் வெற்றியும் பெற்று சந்தோஷமாக இருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் இடையேயான பாசம்-நட்பு-சொந்தம் எல்லாமே அவர்களை மேலும் மேலும் மகிழ செய்தது.

விஜி டேவிட்டுடனும் சற்று அமைதியாக வார்த்தைகளை பரிமாறிக்கொண்டிருந்தாள்.

ஒருநாள்....

விஜியும் ப்ரவீனும் சந்தித்து அர்ச்சனாவின் பேசிக்கொண்டிருக்கும்போது ரம்யாவின் போன் விஜிக்கு வந்தது.

"அக்கா, என்ன பண்ற, எப்படி இருக்க, ஜாப் எல்லாம் எப்படி போகுது" என்றாள் ரம்யா.

"ம்ம்ம், சூப்பர் டி, எல்லாம் சூப்பரா போகுது, உன்னை தான் நாங்க எல்லாரும் மிஸ் பண்றோம், உனக்கு இப்போ காலேஜ் முடியப்போகுது. ஆல்ரெடி இங்க என்னோட ஆபீஸ் அக்கவுண்ட்ஸ் செக்ஷன் ல உனக்கு பேசி வெச்சுருக்கேன், ஆனா நீ மேல படிக்கப்போறியா? என்னோட விருப்பம் என்ன?" என்றாள் விஜி.

"ஏன், மேல படிக்கட்டுமே" என்றான் அருகில் இருந்த பிரவீன்.

"நீ சும்மா இரு பிரவீன், படிக்கறதும் படிக்காததும் அவளோட விருப்பம், நாம இதுல தலையிட கூடாது. நீ சொல்லு ரம்மி" என்றாள் விஜி.

"ஓ,பிரவீன் கூட தான் இருக்கியா" என்றாள் ரம்யா.

"ஆமாம், " என்றாள் விஜி.

"நீ மட்டும் எல்லா பிரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ற இல்ல, நான் படிக்கல, நானும் ஜாப் கு போகலாம் னு இருக்கேன்" என்றாள் ரம்யா.

"சரி டீ, நான் சொல்ற ஜாப் கு வருவியா இல்ல.....நீ ஏதாவது ஐடியா வெச்சுருக்கியா" என்றாள் விஜி.

"இல்லக்கா, இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்ல, நீ சொல்ற ஜாப் தான். பிரெஷர்க்கு எங்க வேலை தருவாங்க" என்றாள் ரம்யா.

"ம்ம்ம் ஓகே, என்னிக்கு வர? நாங்க வரணுமா? பிக் பண்ண, இல்லா நீயே வரியா?" என்றாள் விஜி.

"இல்லக்கா, நீ வாயேன், ப்ளீஸ்" என்றாள் ரம்யா.

"சரி, நானும் காயத்ரியும் வரவா?" என்றாள் விஜி.

"ம்ம்ம், சரி" என்றாள் விஜி.

"சரி, பிரவீன் கிட்ட போன் குடு" என்றாள் ரம்யா.

"என்ன பிரவீன், பெரிய ஆள் தான், நான் எப்போ போன் பண்ணினாலும் போன் பிசி தான், உடனே அக்காவுக்கு பண்ணினா அவ போனும் பிசி தான், அப்டி என்ன தான் பேசுவீங்க, டே அண்ட் நைட்?" என்றாள் ரம்யா.

"அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல, ஜஸ்ட் பேச ஆரம்பிச்சா டைம் போறதே தெரியாது" என்றான் பிரவீன்.

"கொஞ்சம் எங்க கூட எல்லாமும் பேசுங்கப்பா, நாங்களும் விஜி மாதிரி உங்களுக்கு வேண்டப்பட்டவங்க தான்" என்றாள் ரம்யா.

"ஏன் ரம்யா, நான் தான் அடிக்கடி உன்கிட்ட பேசறேனே, அப்புறம் என்ன" என்றான் பிரவீன்.

"என்ன இருந்தாலும் விஜி அக்கா கிட்ட பேசற மாதிரி என்கிட்ட பேசமாற்றீங்க இல்ல, நீங்க மட்டும் இல்ல, முபாரக் அண்ணா, விஜய் அண்ணா யாருமே என்கூட அவ்ளோ பேச மாற்றீங்க, உங்க எல்லாருக்குமே விஜி அக்கா காயத்ரி அக்கா தான் முக்கியம் இல்ல" என்றாள் ரம்யா.

"ரம்யா அப்டி எல்லாம் இல்ல, நீ படிக்கிற பொண்ணு, உன்னை தேவை இல்லாம எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும் னு தான்" என்றான் பிரவீன்.

"இது சமாளிக்கறதுக்காக நீங்க சொல்ற பதில், விஜி அக்கா காயத்ரி அக்காபடிக்கும்போதே தான் நீங்க அவங்களுக்கு நெறையா கால் பண்ணினீங்க" என்றாள் ரம்யா.

"ஐயோ, சாரி, போதுமா, இனிமே உனக்கு நானும் என் பிரெண்ட்ஸ்ம் டெயிலி கால் பண்ண ட்ரை பண்றோம், ஓகே" என்றான் பிரவீன்.

போனை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, "ஏய் ரம்மி, என்ன பிரவீனை போட்டு படுத்தற, போனை வெய், என்னிக்கு வரணும் னு அப்புறம் சொல்லு" என்றாள் விஜி.

"அப்புறம் என்ன அப்புறம், எனக்கு இன்னும் நாலு நாள் தான் எக்ஸாம் இருக்கு, அப்புறம் பிரீ தான், பட் நெக்ஸ்ட் மண்டே ஒரு பார்வெல் பார்ட்டி இருக்கு, அது முடிஞ்சு வரணும், வாயேன், நீயும் பார்வெல் ல கலந்துக்கோ" என்றாள் ரம்யா.

"ட்ரை பண்றேன் டி, ஆபீஸ் ல லீவ் கிடைக்குமான்னு தெரில, நாட் ஸ்யூர், பட் ஐ வில் ட்ரை" என்றாள் விஜி.

"அய்ய்ய், ஜாலி, அப்டின்னா நீ கண்டிப்பா வருவ" என்றாள் ரம்யா.

"ஓகே, ரம்மி, நாங்க கெளம்பனும், நீ போனை வெய்" என்றாள் விஜி.

போனை வைத்ததும், "பிரவீன், எப்படி சின்ன குழந்தை மாதிரி பேசறா பாரு" என்றாள் விஜி.

"என்ன, என்ன பேசறா" என்றான் பிரவீன்.

"உன்கிட்ட என்ன சொன்னா, ஏன் அடிக்கடி போன் பண்ணலைன்னு சொன்னாளா, இதை தான் கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்டே சொன்னா, அவளுக்கு இன்னும் விவரம் பத்தலை, சரி விடு, நாம கிளம்பலாம்" என்றாள் விஜி.

"ம்ம்ம், என்னிக்கு ரம்யாவா கூப்பிட்டு வர போற விஜி" என்றான் பிரவீன்.

"ஆஆஹ், சொல்ல மறந்துட்டேன், நெக்ஸ்ட் மண்டே அவளை போய் கூப்பிட போகணும், நீயும் வரியா" என்றாள் விஜி.

"பாக்கறேன், என்ன னா எங்களுக்கு ஐ.ஓ.பி. இன்டெர் டிஸ்ட்ரிக்ட் சம்மர் டோர்னமெண்ட் ஆரம்பிக்குது, அதுக்கு நாமினேஷன் இருந்தாலும் இருக்கும், பட் அன்னிக்கு நாமினேஷன் இல்லன்னா கண்டிப்பா வரேன்" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், சரி டா" என்றாள் விஜி.

இருவரும் அங்கிருந்து கிளம்பினர். பிரவீன், நீ வெறும் ஜூஸ் தான் குடிச்சிருக்க, போய் ஏதாவது சாப்பிடு, இல்லன்னா எங்க வீட்ல சாப்பிட்டுட்டு போ" என்றாள் விஜி.

"இல்ல, நான் பாத்துக்கறேன்" என்றான் பிரவீன்.

வளவனூரில் விஜியை டிராப் செய்துவிட்டு கடலூர் நோக்கி வண்டியை செலுத்தினான் பிரவீன்.

கடலூரில் அன்று இரவு முபாரக் வீட்டில் சாப்பாடு,

"வா டா...ஏன் இவ்ளோ லேட், எவ்ளோ நேரமா காத்துட்டு இருக்கோம்" என்றாள் நர்கீஸ்.

"இல்ல, விஜி கூட இருந்துட்டு வரேன், நீங்க சாப்பிட்டு வெய்ட் பண்ணலாம் இல்ல" என்றான் பிரவீன்.

"நான் சொன்னேன், ஆனா முபாரக் தான்......சாரி சாரி...மாமா தான்..." நாக்கை கடித்து சிரித்தாள் நர்கீஸ்.

"என்ன டா இது, சரி வாண்டுகள் எங்க" என்றான் பிரவீன்.

"ரெண்டு பேருக்கும் சரியான கோல்டு, பிளே ஸ்கூல் வேற போறாங்க, அது சம்மர் கெம்ப் மாதிரி ஏதோ நடத்தறாங்க, அதுல சேத்து விட்டுட்டு வந்தாரு மாமா, அங்க போயிட்டு யாரு கிட்ட இருந்து ஓட்டிட்டு வந்தாங்கன்னு தெரில இந்த சளியை." என்றாள் நர்கீஸ்.

"டேய், ஏண்டா மூணு வயசு புள்ளைங்கள இப்டி போட்டு படுத்தற" என்றான் பிரவீன்.

"டேய், சும்மா இரு டா, ரொம்ப வாலா இருக்காங்க" என்றான் முபாரக்.

"அது சரி, கோச் ஏதாவது சொன்னாரா, எப்போ நமக்கு நாமினேஷன்" என்று கேட்டான் பிரவீன்.

"மே பி செவ்வாய் இல்லன்னா புதன் ல இருக்கும் டா" என்றான் முபாரக்.

"ம்ம்ம், நான் சண்டேவும் மண்டேவும் சென்னைக்கு போறேன், விஜி கூட, ரம்யாவை கூப்பிட்டு வர, நான் போலாமா?" என்றான் பிரவீன்.

"இது என்னடா கேள்வி, போயிட்டு வா, என்கிட்டே ஏன் பர்மிஷன் கேக்கற" என்றான் முபாரக்.

"இல்ல டா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும், தனியா" என்றான் பிரவீன்.

"ஓ, நான் டிஸ்டர்பன்ஸா?" என்றாள் நர்கீஸ்.

"இல்ல இல்ல நர்கீஸ், நீயும் இருக்கலாம், பட் வீட்ல பேசவேண்டாம் னு பாக்கறேன்" என்றான் பிரவீன்.
"டேய், வாப்பா அம்மா எல்லாரும் தூங்கிட்டாங்க, சும்மா சொல்லு" என்றான் முபாரக்.

"தப்பா நினைக்காத டா, நான் விஜியை லவ் பண்றேனோன்னு தோணுது, ரொம்ப நாள்...ஏன் ரொம்ப வருஷம் கழிச்சு யோசிச்சு யோசிச்சு முடிவு எடுத்திருக்கேன், விஜி என் மனசு பூரா இருக்கா டா, என்னால ஒரு அளவுக்கு மேல என்னை கண்ட்ரோல் பண்ணி வெக்க முடில, அதனால யார் கூடயும் நிம்மதியா பேச முடில, பழக முடில, அவளை தாண்டி என் மனசு எதையும் யோசிக்க மறுக்குது டா. நான் நெனைக்கறது தப்பா" என்றான் பிரவீன்.

முபாரக்கும் நர்கீஸும் சிரித்தனர்.

"ஏன் டா ரெண்டு பெரும் சிரிக்கறீங்க" என்றான் பிரவீன்.

"டேய், நீ விஜியை லவ் பண்றன்னு எங்களுக்கு மூணு வருஷம் முன்னாடியே தெரியும், நீயா உணரணும், நாங்களா எதுவும் உன் மனசுல குழப்பத்தை உண்டாக்க கூடாதுன்னு தான் நானும் நர்கீஸும் எதுவும் சொல்லல. நீயும் லவ் பண்ற, அவளும் உன்னை லவ் பண்ரான்னு நாங்க எப்பவோ கண்டு புடிச்சுட்டோம், இது காயத்ரிக்கு தெரியும், அவதான் முதல்ல கண்டுபிடிச்சு எங்ககிட்ட விஜியோட நடவடிக்கைகளை சொன்னா" என்றான் முபாரக்.

ஆச்சர்யமாக பார்த்தான் பிரவீன்.

"ஆமாம் பிரவீன், உண்மை தான். நீ தாராளமா விஜி கிட்ட ப்ரபோஸ் பண்ணு, அவ நிச்சயமா உன்னை அக்செப்ட் பண்ணுவா, அவளை மாதிரி ஒரு பொண்ணு அழகா லச்சணமா நல்லா படிச்சவளா நல்ல கேரக்டரா உன்னை அவ்ளோ உயிரா நெனைக்கற பொண்ணு கிடைக்க நீயும் குடுத்து வெச்சுருக்கணும், உன்னை போல ஒரு கேர் பண்ற, அவளை உயிரா நெனைக்கற அவ சந்தோசம் தான் உன் சந்தோசம் னு நெனைக்கற பையன் கிடைக்க அவளும் குடுத்து வெச்சுருக்கணும், சோ......." என்றாள் நர்கீஸ்.

"சோ...." என்றான் பிரவீன்.

"எப்போ ப்ரபோஸ் பண்ண போற" என்றாள் நர்கீஸ்.

"சீக்கிரத்துல.........." என்றான் பிரவீன் சிரித்துக்கொண்டே.

"ம்ம்ம், மச்சானும் கல்யாணம் பண்ணிக்க போறான் சீக்கிரத்துல....உனக்கும் ட்வின்ஸ் பொறுக்க வேண்டிக்கறேன் டா மச்சி" என்றான் முபாரக்.

முதல் வாய் சாப்பாட்டை வாயில் வைத்தான் பிரவீன்.

விஜியின் மெசேஜ் வந்தது.

"பீல் டு பி வித் யு டா" என்று.

பகுதி 51 முடிந்தது.

---------------------தொடரும்---------------------

எழுதியவர் : ஜெயராமன் (21-Sep-17, 5:42 pm)
பார்வை : 242

மேலே