தருமத்தின் தலைவர்கள்

ஆதரிசங்கள் ஆயிரம்
காகித வரிகளில்
போதி மர முனிவன் போல்
போதகம் மேடையில்
காவியில் தியாகம் காற்றிலாடுது
தேசியக் கொடியில்
வீதியில் எல்லாம்
பகற்கொள்ளை பணச் சுருட்டல்
சூது கவ்வி நிற்கும்
சுதந்திர ஜனநாயகத்தில்
நீதி நெறி நியாயம் நிலை நாட்ட
தருமத்தின் தலைவர்கள் இன்னும்
தலையெடுக்கவில்லை !

எழுதியவர் : தருமம் (25-Sep-17, 8:59 am)
பார்வை : 63

மேலே