முடிவின்றிப் போகிறது --- முஹம்மத் ஸர்பான்

அணுவணுவாய் உருகிடும்
பனித்துளிகளும் சுடுகிறது
மென்மையான பூக்களும்
தொட்டால் குத்துகிறது
சுவாசத்தின் தேடல்கள்
கண்ணீரால் அழிகிறது
கனவுகளின் நெருப்பில்
நினைவுகள் எரிகின்றது
தோல்வியின் யுத்தத்தில்
உணர்வின்றி துடித்தேன்
வறுமையின் காலடியில்
ஆசைகளை புதைத்தேன்
மின்மினியின் கவிதையில்
இறப்பினைக் கேட்டேன்
உறக்கங்கள் மறந்து
காற்றோடு பேசினேன்
வானத்தின் மேலே
வாழ்விடம் யாசித்தேன்
பறவையின் கூட்டுக்குள்
இசையைக் கற்றேன்
ஏழைகளின் சிரிப்பில்
உலகினை அளந்தேன்
விந்தையின் வனத்தில்
பூக்களைப் பறித்தேன்
மங்கையின் அருளில்
கருவறை புகுந்தேன்
இறைவனின் சதியில்
புதிருக்குள் பிறந்தேன்
புன்னகை நிலவில்
ஆயுதம் செய்தேன்
முட்களின் வீட்டில்
தேகமாய் புதைந்தேன்
அப்போதும் வாழ்வு
முடிவின்றிப் போகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (25-Sep-17, 8:50 am)
பார்வை : 165

மேலே