அன்பு மலரே
கருகிய மலர்
கலைந்த கனவு
எரிந்த தேகம்
எரியாத தாகம்
அன்பே மலரே
அழியாச் சுடரே
பிறந்தது ஏனோ
இந்த மண்ணில்
மரணம் தழுவவோ
மகளே வந்தாய்
புரையோடிய அரசியல்
புழுதிக்கு இரையானாய்
மனங்களை பண்படுத்த
வந்திட்ட மருத்துவச்சியே
புரட்சி கண்ட
புதுமைப் பெண்ணே
நீட்டுக்கு கொடுத்தாய்
சரியான சவுக்கடி
உனக்கு யார் தந்தார்
மரண நெருக்கடி
மரித்துப் போனாலும்
மரிக்கவில்லையடி உன் நினைவு
நீறு பூத்த சாம்பலில்
நிலைக்கட்டும் உன்புகழ்