யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்

அன்னையை கதறவிட்டு,
கனவுகளை சிதறவிட்டு,
தமிழ்நாட்டையே பதறவிட்டு சென்றவனே...
யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்...?
படிக்கும் வேலையை செய்துக்கொண்டே,
பால்கடையில் வேலையை நாடினாயே;
பால்கடையில் வேலையையும் விட்டுவிட்டு,
இறுதியில் புளுவேலை நாடி உயிரிழந்தாயே...
யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்...?
கத்தியால் கையை வெட்டச் சொல்லும்,
ரத்தம்வரும் வரை உதட்டைகடிக்கச் சொல்லும்,
உன் வழ்க்கையை சிதறடிக்கச் செய்யும்,
உன்னையே தூக்குக் கயிற்றில் விழச்செய்யும்...
யாரைக் கேட்டு இப்படி செய்தாய் விக்னேஷ்...?