உன்னில் தொலைவதற்காக

இருள்நதி பெருகி ஓடுகிறது
இரவின் குருதியாக !
விழிகள் உன்னைத் தேடுகிறது
ஒளியின் அருவியாக !
ஆயுதக் குவியல் உன்னோடு
என்னை வெல்வதற்காக !
அன்புப் புதையல் என்னோடு
உன்னில் தொலைவதற்காக !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (25-Sep-17, 9:50 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 143

மேலே