மனிதபிறவி முடித்து

மனிதபிறவி முடித்து
மாண்டு ஒருநாள்
மண்ணுக்குள் நான்
மயானத்தில் உறங்கும்
மவுன பொழுதிலும்
சவப்பெட்டியோடு சேர்ந்து
ஒட்டிக்கொள்ளும்
மண்ணைப்போல எனில்
ஒட்டியே கிடக்கும்
என் கண்மணி
என்னை நீங்கா
உன் நினைவுகள் !

மனிதபிறவி முடித்து
மவுனத்தில் குளித்து
சிதையில் மறைந்து
சதை எரிந்து
சாம்பலாய் மாறியபின்னும்
சளைக்காமல் உன்னை
தேடி வருவேன்
தொய்வின்றி நான்
காற்றோடு கைகோர்த்து !

மனிதபிறவி முடித்து
மாண்ட பின்னும்
மாறாத காதலோடு
காற்றின் தீண்டலாகவோ
காலடி மண்ணாகவோ
ஒலித்துப்பார்க்கும் இசையாகவோ
ஒலித்துப்பார்க்கும் நிலவாகவோ
மிதக்கும் மேகமாகவோ
கதகதக்கும் வெப்பமாகவோ
ஏதோ ஒன்றாக
நிச்சயம் நான்
உன்னை தொடர்ந்து
கொண்டே இருப்பேன் !

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (27-Sep-17, 6:10 am)
பார்வை : 92

மேலே