சிறு சிட்டா

ஏண்டி தங்கம், யாரை 'சிறு சிட்டா' -ன்னு கூப்பிட்ட?
😊😊😊😊😊
எந் தங்கச்சியத்தான் பாட்டிம்மா கூப்பிட்டேன்.
😊😊😊😊😊
அவள் ஒல்லியா ஒயரம் கொறைவா இருக்கறானா 'சிறு சிட்டா'* -ன்னு கூப்பிட்ட? சிட்டுக் குருவி மாதிரி அழகா இருக்கறாளா?
😊😊😊😊😊😊
பாட்டி எந் தங்கச்சி பேரு ஸ்ருஷ்டி. உங்களுக்குத்தான் அவ பேர உச்சரிக்கத் தெரில.
😊😊😊😊😊
என்னவோ தமிழ்ல் பேருக்குப் பஞ்சம் வந்திட்ட மாதிரி ஏந்தான் நம்ம தமிழ் சனங்கள் வாயில நொழையாத பேரையெல்லாம் வைக்கறாங்களோ? எல்லாம் கலி முத்திப் போச்சுடி. தாய் மொழியை மதிக்காதவங்கதான் பெத்தவங்கள முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கறாங்க. இல்லன்னா அவுங்கள அனாதையா விட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போறாங்க.
என்னத்தச் சொல்ல. தரமான கல்வி இருந்தா தாய் தகப்பன் மேல பாசம் இருக்கும்.தாய் மொழிப்பற்றும் இருக்கும். உம். ஒண்ணும் சொல்லறதுக்கில்ல.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிட்டு = சிறிய வகைப் பறவை. சிட்டுக்குருவி.
■■■■■■■■■■■■■■■■■■■■■◆■◆■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Srushti = universe

எழுதியவர் : மலர் (29-Sep-17, 12:51 am)
பார்வை : 245

மேலே