என்னாக் கொடுமடா

சுரேஷ்: மச்சான் மெச் பாத்தியா?
ரமேஷ்: பதிலளிக்க முன் சுரேஷ{க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
சுரேஷ:; (தொலை பேசியில்): அத எப்பவோ குடுத்துட்டேன். போன வைங்க…
என எரிச்சலுடன் அழைப்பை துண்டித்து தொலைபேசியை பைக்குள் இட்டான்.
ரமேஸ்: ஏண்டா மச்சான் மூஞ்செல்லாம் மாறிட்டு. யாரு கதைச்சது?
சுரேஷ்: அந்த சோகக் கதைய சொல்லிச் சொல்லி ஏலா மச்சான்.
ரமேஷ்: ஏண்டா அப்படி எண்ணடா நடந்துச்சி?
சுரேஷ்: ஒரு மாசத்துக்கு முன் நான் ரோட்டில போற நேரம் ஒரு வாகன சாவி விழுந்திருக்குறத கண்டேன் டா. யார்டன்டு தெரியா பாவம்டு நெனச்சி பேஸ்புக், வட்ஸ்அப் ல ஏண்ட நம்பர் அ போட்டு மெஸேஜ் போட்டன்டா. இரண்டு மணித்தியாலத்துலேயே ஒருத்தர் கோல் பண்ணி அந்த சாவிய எடுத்துக் கொண்டார் டா. அந்த மெஸேஜ் இன்னம் வட்ஸ்அப் சுத்துரதால சாவிய தொலைக்குறவனெல்லாம் எனக்கு கோல் பண்றான் டா.
என்னாக் கொடுமடா!
எனக் கூறியவாறு தலையில் கையை அடித்துக் கொண்டான்.

எழுதியவர் : அஹமத் நஸீப் (30-Sep-17, 10:51 pm)
சேர்த்தது : அஹமத் நஸீப்
பார்வை : 335

மேலே