பயணங்கள் தொடர்கின்றன

பேருந்து ரோதைகளுக்கே
வலிக்குமளவிற்கு பயணங்கள்
தொடர்கின்றன...
ஜன்னலோரமாய் தலை
சாய்த்து பார்த்த போது
இன்ஜீனற்று இறகு விரித்து பறக்கும்
பறவையாய் பறந்திட உள்ளம்
ஏங்கிய போதிலும்...
பணப்பையில் விரல்கள்
குழியோடி காகித தாளையும்
குற்றிநாணயங்களையும்,
வெற்றிலை மேல் பாக்கு வைப்பதை போல் பக்குவமாய் பேருந்தின் அத்தருண
இலச்சாதிபதியாய் நம் கண்ணுக்க காட்சியளிக்கும் கண்டெக்டரின் கொடையளித்தவாறே ஆரம்பிக்கின்றன
இப்பயணங்கள்...
இப்பயணப்பாதையில் ஆறு மாத காலம்
இளைப்பாறிய மரநிழல் தான்
பாடசாலை....
இறுதிப்பரீட்சை எழுதி மறுநாளே
பயிற்சி ஆசிரியையாக பதவியேற்பு,
அன்று பிறந்த பாலகன் பள்ளிக்கூடம்
செல்வது போல ஓர் உணர்வு...

சிறு வயதில் என் எதிர்கால இலட்சியப் பட்டியலில் அடங்காத ஆசிரியர் தொழில்
இன்று என் அடையாளமாக...
மாணவமழலைகளின் சில்லறைப்பேச்சுக்கள்
அச்சத்தையும் கூச்சத்தையும் அகற்றுவதாய்
அமைந்த வேளையில்
அதிபரின் கடுகடுப்பான பேச்சுக்களும்
என் சக ஆசிரியர்களின் அதட்டலான
பேச்சுக்களும் காலப்போக்கில்
கரைந்து போயின...

அடங்காத ஆண்வகுப்பு மாணவர்கள்..
அன்புக்கு அடிமையாகிய பெண்வகுப்பு
மாணவிகள்...
குளறுபடிகளை கட்டுப்படுத்துவதாய்
அமைந்த தொழில்நுட்ப தண்டனைகளான CCTV கெமராக்கள்...

என் பாடசாலை பக்கங்களை புரட்டி
பார்க்க வைத்த வைபவங்கள்...
அதில் மெய்சிலிர்க்க வைத்த மாணவர்களின் திறமைகள்...

கேள்விக்குறிகளால் அலங்கரிக்கப்பட்ட
பரீட்சை மண்டபங்கள்...
விறுவிறுப்பான அத்தருணத்தில் கூட
வெகுளித்தனமான மாணவர்களின்
பேச்சுக்கள்...


ஆயிரம் அனுபவங்களை அள்ளி வீசிய
பாடசாலையை பிரியும் தருணமிது...
மற்றொரு பயணத்தை எதிர் பார்த்தவளாய்விடைபெறுகிறேன்...!

எழுதியவர் : (29-Sep-17, 4:19 pm)
பார்வை : 66

மேலே