காதலா கடமையா
காதலா! . . . கடமையா? . . . .
காதலில் மிதக்கிறான்
ஆனந்தத்தில் . .
கடமையில் மூழ்குகிறான்
ஆதங்கத்தில் . . .
சுண்ணத் தெளிவுக்குள்
ஓர் புழுவாய்
குழப்பத்தில் . . . .
தெளிந்து மீள்கின்றான்
தேம்பலை நீக்கி . . .
சம குவிய தூரத்தில்
நிறுத்துகின்றான்
காதலையும் .....கடமையையும் . . . .
அங்கே . .
இருவிழியின்
ஓர் மெய்பிம்பம் . . .
வாழ்க்கை ஓட்டத்தின்
ஈரெல்லைகளாய்!..
மனிதனுக்கு
காதலும் .... கடமையும் . . .
சு.உமாதேவி