கரும்பு
என் உடலை வெட்டி வைத்து வீதி தோறும் வியாபாரம் செய்கின்றனர்!!
என் துகில் உரிப்பை கண்டீர்களா!!
உங்கள் கண்ணில்கண்ணீர் வரவில்லையா!
என் உடலை பார்ப்பதில் மனிதனின் ஆர்வத்தை பார்த்தீர்களா !!
என் ரத்தத்தை ருசி பார்ப்பதற்கெனவே தனி விழாவையே வைத்து கொண்டாடுகிறான்.
இந்த பெண்ணின் துகில் உரிப்பை தட்டி கேட்க எந்த கண்ணனும் பிறக்கவில்லையா!
இதை வேடிக்கை பார்த்த இறைவனோடு ஒரு மகாபாரத யுத்தம் செய்து கொண்டிருக்கின்றேன்!! --- - -இப்படிக்கு கரும்பு