தேசத்தந்தையே

தேசத்தந்தையே!
=====================================ருத்ரா


உன் "புன்னகையை"
எங்களால் விடவும் முடியவில்லை.
அந்த கரன்சியை
உன்னால் விடவும் முடியவில்லை.

_____________________________________________

எங்கள் சுதந்திரத்தின் கதையை
உன் மார்புக்கூட்டில்
துப்பாக்கிக்குண்டுகள் ஏந்தி
எழுதிமுடித்தாய்.

______________________________________________

வள்ளுவன் "கொல்லாமைக்கு"
உரை எழுதி சோர்ந்த பரிமேலழகர்கள்
ஒற்றைச்சொல்லில் உன் பெயரை
இன்று எழுதிமுடித்தார்கள்

________________________________________________

எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
உன் கையில் நீண்ட கைத்தடி என்று!
அது வெள்ளையன் நடுங்கிய‌
அன்றைய ஏ.கே 47.

________________________________________________

நீ "ஹே ராம்" என்று கூப்பிட்டாய்!
மராமரங்களில் ஒளிந்தவனையா?
மதாமதங்களில் ஒளிந்தவனையா?

_________________________________________________

என் தண்டி யாத்திரையின் அர்த்தம்
இன்னுமா புரியவில்லை?
உப்பு போட்டு சாப்பிடுகிறாயா? இல்லையா?
இன்னும் இப்படி
ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறாயே?

__________________________________________________

எழுதியவர் : ருத்ரா (3-Oct-17, 12:32 am)
பார்வை : 1326

மேலே