சோம்பேரி
விடியற்காலை பார்ததில்லை.
சூரியனை காலை போதில் கண்டதில்லை.
விரைந்து சென்று இயற்கையை இரசித்ததில்லை.
நண்பர்களுடன் பேசி விளையாடியதில்லை.
இப்படி எல்லாம் ஒரு நாளும் சங்கர் என்பவனை வெளியில் பார்த்தில்லை. சோம்பேரிதனம் என்றால் இந்த ஊரில் உதாரணம் சங்கர் என்று கூறலாம். சங்கர் அவன் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் துங்கி கொண்டு இருப்பான். அவனை போன்று யாரும் இருத்தில்லை.
சங்கருடைய அன்றாட வேலை என்றால் மூன்று வேலையும் நன்றாக சப்பிட்டுவிட்டு துங்குவது தான்.சங்கரை பார்த்தால் யாருக்கு வேண்டுமானலும் கோபம் வந்து மழையாக கொட்டும். யாருடைய பேச்சையும் கேட்கமாட்டான். சொல் அறிவும் கிடையாது. சுய அறிவும் கிடையாது. முட்டாள் வேகுளி என்றும் சொல்லலாம். ஆனால் சில விஷயங்களில் சங்கர் விவரமாக இருப்பான். வீட்டில் பலகாரங்கள் செய்தால் யாருக்கும் வைக்காமல் அவனே தின்று விடுவான். சங்கருக்கு அதில் ஒரு அலாதியான சந்தோசம். பிறர் சாப்பிட்டார்களா இல்லையா என்று கூட கேட்க மாட்டன் சங்கர். சங்கரின் பெற்றோரும் வெளியுலகம் தெரியாமல் அவனை வளர்த்து விட்டார்கள். ஆதனால் சங்கருக்கு உலகம் என்பது தெரியாது. சங்கருக்கு நண்பர்களுடன் பழக்கமும் இல்லை. ஷங்கரிடம் இருந்து எதுவேண்டுமானாலும் அவனை மிரட்டினால் வாங்கிவிடலாம். அந்தளவிற்கு அப்பாவி. காலம் சென்றுகொண்டிருக்கிறது சங்கருக்கு வயது 28 ஆகின்றது. சங்கருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் முயற்சி படுகிறான்.
சங்கரை பார்த்த பெண்கள் இவனது சோம்பேறித்தனத்தை பற்றி அறிந்து இவனை திருமணம் செய்ய முன்வரவில்லை. காலங்கள் சென்றுகொண்டே இருக்கிறது. பெண் தேடும் படலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காலப்போக்கில் சங்கரின் நிலைமை கண்டு அவனது அம்மாவும் அப்பாவும் கவலைப்பட்டு இழந்து விடுகிறார்கள்.
சங்கர் அவனது அப்பாவும் அம்மாவும் இறந்ததை தாங்கி கொள்ள முடியவில்லை. தனியாக இருந்த கஷ்டப்பட்டான். இருந்த சொந்த பந்தங்களும் அவனது அம்மா அப்பா காரியத்தை முடித்து விட்டு அவர் சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். வறுமையில் வாடினான். வேலைக்கும் செல்லவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான். வெளி உலகம் தெரியாமல் வளர்ந்ததால் வீட்டிலேயே முடங்கி கிடந்தான். பசி வாட்டியது. யாரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
எப்பொழுதும் போல சங்கர் இருக்கும் சோபாவில் படுத்துக்கொண்டு உறங்கினான்.
காலங்கள் செல்லச் செல்ல சங்கருக்கு வயது ஆயிற்று. இறுதியில் தனிமையில் கிடந்து கிடந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்டு வெளியில் சுற்றத் தொடங்கினான். தன்னிலை மறந்து திரிந்து கொண்டிருந்தான். சங்கரின் இந்த நிலைமை கண்டு பரிதாபப்படுவதா இல்லை பெற்றோரின் தவற சங்கர் வாலிப வயதில் வெளியில் சென்று உலகத்தை அனுபவிக்கத் தெரியாதவன் சங்கரின் தவறா தெரியவில்லை இறுதியாக சங்கரின் நிலைமை பரிதாபத்துக்குரிய தாயிற்று.
கதையில் இருந்து நாம் அறிவது என்னவென்றால் எப்பொழுதும் சோம்பேறி தனமாக இருக்கக்கூடாது. நாம் நல்லதையும் கெட்டதையும் தெரிந்து கொண்டால்தான் இந்த உலகத்தை வெல்ல முடியும் இல்லையென்றால் சங்கரின் நிலைமையும் தான் நமக்கும் ஏற்படும். ஆதலால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகும் வெளி உலகத்தை தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
சாரதி