என் பெயர்

அம்மாவிற்கு அமுலுக்கட்டி அப்பாவிற்கு அம்முக்குட்டி
பாட்டிக்கு பட்டு, வைரம் ,
தாத்தாவிற்கு தங்கம்
அண்ணாவிற்கு அரிசிமூட்டை
அத்தைகோ அழகு செல்லம்
மாமாவிற்கோ தங்கமயில்
தோழிகளுக்கோ எருமை ,பண்ணி
அலுவகத்திலோ கோபக்காரி
கணவனுக்கு டியர்
எத்தனை விதமாய் அழைத்தாலும் இப்போதெல்லாம் எதுவும் காதில் விழுவதில்லை
அம்மா என்ற இந்த அழுகுரல் தவிர....

எழுதியவர் : (4-Oct-17, 12:45 am)
Tanglish : en peyar
பார்வை : 263

மேலே