ஆண் பெண் ஈர்ப்பு பள்ளியிலும் கல்லுரியிலும் ஒரு பார்வை

" ஆண் பெண் ஈர்ப்பு ஆணடவன் எல்லா இனத்துக்கும் கொடுத்து இருக்கும் வர பிரசாதம்.

பள்ளியில் படித்து வரும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஒன்பதாவது பத்தாவது படித்து
கொண்டு இருக்கும் போதே அவர்கள் உடல் வளர்சசியாலும் இப்போதைய சினிமா, T.V. சிரியல்
ஆங்கில சினிமா பார்ப்பதாலும் இந்த ""ஈர்ப்பு"" அதிகம் ஆகிறது.

பள்ளியில் படித்து வரும் மாணவனுக்கும் மாணவிக்கும் அறிவு முதிர்ச்சி Maturity இருக்க
வாய்ப்பே இல்லை.இந்த ""ஈர்ப்பு"" ஏற்படுத்தும் ஒரு கிளர்ச்சியால் அவர்கள் தங்களை மறந்து தவறு
செய்து விட்டால் அவர்கள் வாழ்க்கையே வீணாகி போக நிறைய வாய்ப்பு இருக்கிறது. இவர்களை தான்
நாம் "" பிஞ்சிலே பழுத்த பழம்"" என்று பேர் சூட்டி விடுகிறோம். அதனால் பள்ளி படித்து வரும் மாணவ
மாணவிகளுக்கு அறவே தவிக்க வேண்டும்.

சரி இப்போது கல்லூரியில் படித்து வரும் மாணவனையம் மாணவியையும் பற்றி சொல்லலாம்.
இந்த வயதில் அவர்களுக்கு கொஞ்சம் வயது அதிகமாக ஆகி இருப்பதால் அறிவு தெளிவும் Maturity
வந்து இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.தவிர நாம் படித்து பாஸ் பண்ணி, நம்மை பெற்றவர்கள்
எவ்வளவு கஷ்டப் பட்டு நம்மை இந்த அளவுக்கு படிக்க வைத்து இருக்கிறார்கள். அவர்களை சந்தோஷப்
படுத்த வேண்டும், நமக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்கிற
ஆவல் அதிகமாக இருக்கும்

இந்த நிலையிலே அவர்கள் படித்து வரும் போது ஒருவர் மேல் மற்றவருக்கு ஒரு ""ஈர்ப்பு""
ஏற்படுவதில் தவறு இல்லை. இந்த ""ஈர்ப்பை""பயன் படுத்தி அவர்கள் இருவரும் படிப்பிலே ஏற்படும்
சந்தேகங்களை தீர்த்து கொண்டு நிறைய உலக விஷயங்களை பரிமாறிக் கொண்டு, ஒருவர் மனதை
மற்றோருவர் புரிந்து கொண்டு அவர்கள் இடையே இருக்கும் விருப்பு வெறுப்புகளை எல்லாம் பகிந்து
கொண்டு இருவர் குடும்பத்தின் பொருளாதார நிலைமையும் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

படிப்பு முடிந்து இருவரும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்த பின்பு , அவர்கள் பெற்றோர்களின்
விருப்படியோ , இல்லை ஒருவர் மேல் மற்றோருவருக்கு காதல் மிகுதியாலோ இருவரும் திருமணம்
செய்து கொண்டு வாழ்ந்து வரலாம்

ஒரு முன் பின் தெரியாத ஒருவரை, அவர்கள் விருப்பு வெறுப்புகளை தெரியாத ஒருவரை
பெரியோர்கள் ஏற்பாடு பண்ணி விட்டார்களே என்று திருமணம் செய்துக் கொண்டு அவர்கள்
வாழ்க்கையை நரமாகிக் கொண்டு வாழ்ந்து வந்து கொண்டோ, இல்லை ஒருவரை மற்றோருவர்
விவாக ரத்து பண்ணி கொண்டு பெற்றவர்களுக்கு மாளாத துக்கத்தை தருவதை தவிர்க்கலாமே

பள்ளிகளில் நிச்சியமாக இந்த " ஆண் பெண் ஈர்ப்பை"" அறவே தவிக்க வேண்டும். இது நல்லதே
இல்லை.

ஆனால் கல்லுரி படிக்கும் போது இந்த ""ஈர்ப்பை"" நல்ல முறையிலே கையாண்டு ஒரு ஆணும் ஒரு
பெண்ணும் அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையிலே அமைத்து வர வாய்ப்பு இருக்கிறது.

இல்லையா சொல்லுங்க??




.

எழுதியவர் : ஜெ சங்கரன் (4-Oct-17, 11:05 am)
சேர்த்தது : Sankaran
பார்வை : 238

மேலே