ஒரு சிந்தனை

நான் முன்னம் எழுதி இருந்தது மாதிரி நான் சின்ன வயதில் இருந்து நிறைய கோவில்களுக்கு
போய் வருவது வழக்கம்.

அந்த நாட்களில் கோவில் குருக்கள் ஒரு பத்து பன்னிரண்டு பக்தர்கள் கடவுள் சன்னிதானத்தில்
வந்த உடனே கொஞ்சம் சூடத்தை ஏற்றி சுவாமிக்கு காட்டி விட்டு பக்தர்களுக்கு காட்டுவார், அநேகமாக
கடைசியிலே இருக்கும் பக்தர் அந்த கற்புறத்தை ஒத்தி கொள்ளும் போது அந்த சூடம் அணைந்து விடும்.

அவர்கள் சந்நிதானத்தை விட்டு கிளம்பிப் போன பிறகு அடுத்து வரு பக்கதர்களுக்கு அந்த
குருக்கள் மறுபடியும் கொஞ்சம் சூடத்தை ஏற்றி சுவாமிக்கு காட்டி விட்டு பக்தர்களுக்கு காட்டுவார்

சூடத்தின் தரம் குறைந்து போய் அதை கொளுத்தும் போது அதிகமான கரும் புகை வந்து சுவாமி
சன்னிதானம் பழுது அடைந்தது அடிக்கடி சன்னிதானத்தை சுண்ணாம்பு அடிக்கும் நிர்பந்தம்
ஏற்படுகிறது. இதை தவிர்க்க சுவாமிக்கு எண்ணை தீபம் ஏற்றும் வழக்கம் வந்து இருக்கலாம்.

ஆனால் சமீப காலத்தில் இப்ப இருக்கும் குருக்கள் காலையிலே ஒரு தடவை தீபத்தில்
எண்ணையை விட்டு ஏற்றிய தீபத்தையே சுவாமிக்கும் காட்டி விட்டு பக்தர்களுக்கும் காட்டுகிறார்.
வந்த பகதர்கள் சன்னிதானத்தை கிளம்பி போய் விட்ட பிறகு அடுத்து வரும் பக்தர்களுக்கு அதே
தீபத்தை எடுத்து போய் சுவாமிக்கு காட்டி விட்டு பக்தர்களுக்கு காட்டுகிறார். எண்ணை குறைய குறைய
மறுபடியும் இன்னும் கொஞ்சம் எண்ணையை விட்டு சுவாமிக்கும் பக்தர்களுக்கும் காட்டி வறார்

ஒரு தடவை சுவாமிக்கு காட்டின தீபத்தை பக்தர்களுக்கு காட்டலாம். அந்த தீபத்தை பகதர்கள்
கண்ணில் ஒற்றிக் கொண்ட பிறகு அதே தீபத்தை மறுபடியும் காட்டுவது எவ்வளவு தப்பு.பாவம்

கோவில் நிர்வாகத்தார் வரும் பக்தர்களிடம் சுவாமிக்கு எண்ணை விட்டு தீபம் ஏற்ற பணமோ.
இல்லை கோவிலுக்கு எண்ணையை தருமாறு கேட்டு வாங்கி வந்தோ, இல்லை உண்டியலில் வரும்
பணத்தில் குருக்களுக்கு நிறைய எண்ணையை வாங்கி கொடுத்து ஒவ்வொரு தடவையும் புது திரியை
மாத்தி எண்ணையை விட்டு தீபத்தை ஏற்றி சுவாமிக்கு காட்டி விட்டு பக்கதர்களுக்கு காட்டலாமே.

இதனால் பகதர்கள் கண்ணில் ஒற்றிக் கொண்ட தீபத்தை கடவுளுக்கு மறுபடியும் காட்டி
கோவிலுக்கு வரும் பகதர்கள் மனம் புண் படாமல் பார்த்து கொள்ளலாமே

அந்த தவறையும் பாவத்தையும் தவித்து வரலாமே.

இல்லையா சொல்லுங்க???

எழுதியவர் : ஜெ சங்கரன் (4-Oct-17, 11:59 am)
சேர்த்தது : Sankaran
Tanglish : oru sinthanai
பார்வை : 366

மேலே