நைனா

நைனா, இங்க வாடிச் செல்லம்.
😊😊😊😊😊😊
யாரைப் பாட்டிம்மா நைனா-ன்னு கூப்பிட்டீங்க. என்ன, சென்னைத் தமிழ் எல்லாம் கத்துகிட்டீங்க போல இருக்குது.
😊😊😊😊😊
அடியே பொன்மணி, நாஞ் சென்னைக்குப் போனாலும் இஸ்துக்குணு எல்லாம் கத்துக்கமாட்டேன். புதுச்சேரிக்குப் போனாலும் இட்டுக்குணு எல்லாம் கத்துக்கமாட்டேன். நாங் காரைக்காமல் அம்மையார் வாழ்ந்த மண்ணில பொறந்தவடி. அந்தக் காலத்திலேயே அஞ்சாம் வகுப்பு படிச்சவ. எழுத்துப் பிழையில்லாம எழுதுவேன். நீ முதுகலைப் பட்ட வகுப்பு மாணவி. தமிழ் இலக்கியம் படிக்கிறவ. உந் தேர்வுத்தாளக் காட்டினேயே அப்பவே உந் தமிழறிவு தெரிஞ்சுபோச்சு. பக்கத்துக்கு நாலு எழுத்துப் பிழை. இலக்கணப் பிழை. நீயெல்லாம் தேர்வுத்தாள் திருத்தும் அறையில வீசற அனுதாப அலையில தேறி வந்தவடி. என்னைப் போயி "சென்னைத் தமிழ்" பேசறதாச் சொல்லறியே.
😊😊😊😊😊
என்னோடத் தேர்வுத் தாளைப் பத்தியெல்லாம் அடிக்கடி விமர்சிக்காதீங்க பாட்டிம்மா. உங்க காலம் வேற. எங்க காலம் இப்பிடி. சரி, யாரை நைனா -ன்னு கூப்பிட்டீங்க.
😊😊😊😊
அதோ அங்க வர்றாளே அந்தக் கறுப்புக் கண்ணாடிக்காரி அவளத்தான் கூப்பிட்டேன். அவ என்னோட மூத்த மகள் வெண்ணிலாவோட பொண்ணு. வடநாட்டிலே அவ அப்பா வேலைல இருக்கறாரு. அவ பேருதான் நைனா.
😊😊😊😊😊
எனக்கென்னவே இது சென்னைத் தமிழ்ப் பேரு மாதிரி தெரியுது.
😊😊😊😊😊
நானும் அப்பிடித்தான் நெனச்சேன். நைனா -ங்கறது இந்திப் பேராம்.
😊😊😊😊😊
சரி நைனா-வுக்கு என்ன அர்த்தம்.
😊😊😊😊😊
'நைனா'-ன்னா 'கண்கள்' -ன்னு அர்த்தமாம்.
😊😊😊😊😊
அடக் கடவுளே. நைனா -ன்னு இந்திப் பேர வச்சதுக்கு 'கண்கள்' -ன்னு தமிழப் பேர வச்சாக் கேவலமா?
😊😊😊😊😊
அதுபோலத்தான் நம்ம தமிழ் மக்கள் நெனைக்கிறாங்க. வட மாநில மக்கள் நம்ம தமிழர்களின் இந்திவெறியைக் கேள்விப்பட்டா நம்மளையும் நம்ம மொழியையும் கேவலமாப் பேசுவாங்கடி பொன்மணி.
😊😊😊😊
படிச்சவங்களே தமிழை இழிவுபடுத்தறாங்க. நாம என்ன செய்யமுடியும்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Naina = eyes.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (4-Oct-17, 12:50 am)
பார்வை : 295

மேலே