துணைக்கட்சி

மாப்ள : மாமா எனக்கு ஒரு ஆச
மாமா : சொல்லு மாப்ள உன் ஆசைய
மாப்ள : மாமா நான் அரசியல்வாதி அகனும்

மாமா : நாட்டுல எவ்வளவு ஆச இருக்கு? உனக்கு ஏன் மாப்ள அரசியல்வாதி ஆகனும்?????

மாப்ள : அதெல்லாம் எனக்கு தெரியாது நான் அரசியல்வாதி ஆகனும்

மாமா : சரி அப்டியே ஆகட்டும்

மாப்ள : மாமா எனக்கு ஒரு சந்தேகம்

மாமா : என்ன அது? கேளு நான் சொல்றேன்

மாப்ள : ஆமா ஆளங்கட்சினா என்ன? எதிர் கட்சினா என்னா?

மாமா : அடப்பாவி இது தெரியாமலே நீ அரசியல்வாதி ஆகபோரியா?????

மாப்ள : சொல்லு மாமா

மாமா : எந்த ஒரு கட்சி ஆதிகம் தொகுதில ஜெய்ச்சி இருக்கோ அது ஆளங்கட்சி, தோத்துபோன கட்சி எதிர்கட்சி மாப்ள

மாப்ள : அப்ப ஆளங்கட்சி வேல என்ன??? எதிர் கட்சி வேலை என்ன ??


மாமா : ஆளங்கட்சிக்கு ஆட்சி செய்யுற வேலை , எதிர் கட்சிக்கு அத எதிர்க்குற வேலை

மாப்ள : அப்ப இன்னொறு சந்தேகம்

மாமா : என்ன ஊங்கூட ஒரே தொந்தரவா போச்சு......
சரி இதையும் கேளு

மாப்ள : ஏன் மாமா எதிர் கட்சி ஆளங்கட்சியோடு சேர்ந்து துணைகட்சியா ஆட்சி செஞ்சா அது எப்படி இருக்கும்???????

மாமா : நல்ல ஆட்சி செஞ்சா நல்லாதான் இருக்கும்

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Oct-17, 8:20 pm)
பார்வை : 196

மேலே