தன்னிகரில்லா தந்தைக்கு

அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா
ஆழ்ந்த அன்பு.......
கடிந்து பேசாத கனிவு,
கவலை மறக்கச் செய்யும் பரிவு,
கண்ணின் இமை போன்ற காவல்,
வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத வாஞ்சை......
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய
விவேகம்......
வாழ்க்கை முழுவதுமே எமக்கான
அர்பணிப்பு....

அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது- ஆம்
அகிலமிதில் எல்லோருக்கும்
அமைவதில்லை இந்த உறவு அருமையாக..
குறையேதுமில்லா எம் மகிழ் வாழ்விற்கு
குறை கூற இயலா உந்தன் உழைப்பே விதை.
கட்டாயம் காலம் உள்ளவரை
கடவுளுக்கு நன்றி சொல்வேன்..
கடுகளவும் குறையேதுமில்லா உனை
தந்தையாய் தந்ததற்கு... யாத்வி

எழுதியவர் : யாத்வி (4-Oct-17, 6:54 pm)
பார்வை : 1172

மேலே