அகர வரிசை பொங்கல்

அன்பு பொங்கினால் இல்வாழ்க்கை
ஆற்றல் பொங்கினால் படைப்புக்களே
இன்பம் பொங்கினால் நல்வாழ்க்கை
இனிமை பொங்கினால் நல்லுறவு
உண்மை பொங்கினால் சமநீதி
ஊக்கம் பொங்கினால் புதினங்களே
எளிமை பொங்கினால் மனநிறைவு
ஏற்றம் பொங்கினால் நிறைவாழ்வு
ஐசுவரியம் பொங்கினால் புகழ்மிகுமே
ஒற்றுமை பொங்கினால் ஓர்குலமே
ஓதுதல் பொங்கினால் நுண்ணறிவு
ஔடதம் பொங்கினால் நலவாழ்வு
அன்பரே!
இந்நன்னாளில் உம் வாழ்வில்
அனைத்தும் செம்மையாகப் பொங்கி
செழிப்பும் வனப்பும்
தங்கி நிறைந்திட
தமிழனாய் வாழ்த்தும்
-ஜான் பிரான்சிஸ்

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (4-Oct-17, 11:35 am)
பார்வை : 2580

மேலே