கல்லூரிக் கவிஞன் --- முஹம்மத் ஸர்பான்

எதற்காக உன்னைக் கண்டேன்
என்னிதயத் துடிப்புக்கள்
அவளுக்கான கவிதையானது
யுகப் பூக்களின் காதுகளில்
என்னழகியின் புராணம்
சொல்லிப் புலம்புகிறேன்
மூங்கில் காட்டில் சிறு வீடு
மரணம் நமக்கு ஒரு கூடு
தேவதையின் கன்னக்குழி
எனக்கான சவப்பெட்டியை
தயாரித்துக் கொண்டிருக்கிறது
கவிதையொன்று
கவிதை கேட்டால்
ஒரு முறை புன்னகை
மறு முறை பூக்களை
பார் என பதிலுரைப்பேன்
வெண்ணிலவின் மாநாட்டில்
உன்னுடைய வெட்கங்கள்
உரையாற்றிய வார்த்தைகள்
வானத்திலுள்ள நட்சத்திரங்கள்
நீ கூந்தலை விரித்த போது
நயாகராவும் யமுனையும்
உன் வீட்டு பொம்மையானது
கனவுகளைச் சுட்டுக் கொன்ற
விழிகளின் வாக்கியங்கள்
என்னிதயத்தை
நாஹசாக்கியாக்கியது
உன் பெயரை மட்டும்
எழுதும் கவிஞனாய்
நாளை ஒருவன் பிறப்பான்
அவன் இந்த
கல்லூரிக்குள்ளும் இருக்கலாம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-Oct-17, 6:19 pm)
பார்வை : 261

மேலே