காதலிக்கிறேன் உயிரே

தோள் சாயும் தருணங்கள்...
மடி மீது துயிலும் சுகம்...
காமமற்ற காதல் முத்தம்...
தாய்மை போன்ற அரவணைப்பு...
சேயைப் போன்ற குதூகளிப்பு...
நெடுந்தூர பயணங்களில் விரல்கள் கோர்ப்பு...
எதைப்பற்றியேனும் இனிய உரையாடல்...
ஈருடலும் ஓருயிருமாய் இணங்குதல்...
அன்பு நெஞ்சத்தின் பாச பிணைப்பு... காதுமடல் வருடும் மூச்சுக்காத்துச் சுகம்...
இயலாமையிலும் அருகாமை... நிசங்களையும் நினைவுகளையும் எண்ணிய உள்ளக்களிப்பு...
உனக்காகவே தான் நான் என்ற உரிமை...
கபடங்கள் இல்லா தூய நேசம்...
பிணிக்கு மருந்தாய் இனிய உள்ளம்...
இவை யாவும் கிடைத்த பெருமிதத்தில்
என் சின்ன இதயம்...
காதலிக்கிறேன் உயிரே!!!!