பெண்கள் அறியாத ஆண் நெஞ்சின் வலிகள்

பெண் நெஞ்சை பூ என்று நினைத்து
கண்மூடி தனமாய் காதல் களத்தில் இறங்கினேன்
இறங்கிய பிறகுதான் உணர்ந்துகொண்டேன்
பெண்ணின் நெஞ்சம் எனும் பூக்கள் இதழ்களால்
உருவாக்கப்பட்டவை அல்ல முட்களால் கொய்யப்பட்டவை என்று
ஆனாலும் மனம் வீசிகொண்டிருக்கும் காதலை கை கழுவும் வரைக்கும்.....

மௌனம் சுமக்கும் பெண்களின் நெஞ்சம்
மரணித்துகொண்டிருக்கும் ஆண்களின் உள்ளத்தை ஏன்
இன்னும் உணரவில்லையோ ?
மௌனம் என்பது பெண்களின் தேசிய கீதம்
மரணம் என்பது ஆண்களின் இதய கீதம்
இதற்கு இடையில் காதல் என்ற மூன்று எழுத்து
மேடை கட்டி பாடுகிறது பாசம் என்ற வேச கீதம் ......

வாழ்வில் முதலாவது காண்பது அம்மாவை
இரண்டாவது காண்பது அப்பாவை
மூன்றாவது காண்பது சகோதரர்களை
நான்காவது காண்பது உறவுகளை
ஐந்தாம் இடம் தொட்டு ஆறடி மண் காணும் வரைக்கும்
காணப்போவது காதலியை
ஆனாலும் இந்த உண்மையை உலகில்
எந்த பெண்ணும் இதுவரை உணரைல்லையே!......

ஆண்களின் காதல் கவிதையில் ஆரம்பித்து கண்ணீர் தொட்டு
கல்லறை காணும் வரைக்கும் முடிவதில்லை
பெண்களின் காதல் கனவில் ஆரம்பித்து கற்பனைகளில் தொட்டு
காணலாகா கரைந்து போவது பெண்களுக்கே புரிவதில்லை
ஆண்களை பார்த்து கால் செருப்பு தூக்கிய பெண்கள் உண்டு
பெண்களை பார்த்து கால் செருப்பு தூக்கிய ஆண்கள் உண்டோ?

நீ என்ற ஒரு எழுத்து எடுத்து
நாம் என்ற இரு எழுத்தாக மாற்றி
காதல் என்ற மூன்று எழுத்தை சொல்லி
மரணம் என்ற நான்கு எழுத்துக்கு வழி வகுத்து தரும்
சில பெண்களின் காதல் வேண்டாம் நண்பா .

எழுதியவர் : (5-Oct-17, 5:09 pm)
பார்வை : 3210

சிறந்த கவிதைகள்

மேலே