தீபாவளி -- 2017 சகல செல்வங்களும் கிடைக்கும் லட்சுமி குபேர பூஜை

தீபாவளி நாளில் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெறமுடியும். தனது தாயிடம் இருந்து நவநிதியங்களைப் பெற்றவர் குபேரர். அவரை தீபாவளி நாளில் வழிபடுவோருக்கு அவர் நவநிதியங்களையும் அள்ளித்தருவார்
ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் அதாவது பொருள் செல்வம் மட்டுமின்றி, வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும்

திருவேங்கடவனுக்கே செல்வம் அளித்து கை கொடுத்து உதவிய குபேரன் விஷ்வரஸ் என்பவருடைய மகன். குபேரன் லட்சுமி தேவியின் பரமபக்தனாக பூஜித்து வந்ததால் தேவியின் பூரண கடாட்சம் கிடைக்கப்பெற்று பெரும் செல்வந்தனாக மாறியவன் என்பது மட்டுமின்றி குபேரனை பூஜித்தால் செல்வம் தழைத்தோங்கி வறுமை ஓழியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது
செல்வம் தரும் லட்சுமி
தீபாவளி தினத்தன்று செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையினால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். சுக்லாம் பரதரம் சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும்.
குபேர பூஜை
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியையும் அவளால் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தையும் உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வின் துன்பங்கள் விலகி ஓடும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள் என்பதால்"ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'என 108 முறை சொல்லலாம்.
செல்வம் செழிக்கும்
தரித்திரம் நீங்கி செல்வம் செழிக்க ஒவ்வொரு இல்லத்திலும் மகாலட்சுமி- குபேரனுடைய பூஜையை பூஜை விதிப்படி செய்து வந்தால் மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் திருமகளின் அருள் கடாட்சம் மட்டுமின்றி அவளால் நிரந்தர செல்வந்தனாக மாற்றப்பட்ட ஸ்ரீ குபேரனுடைய அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வு தழைத் தோங்கும் என்பதே உண்மை.
இனிமையான நைவேத்தியம்
தீப ஒளித் திருநாளில் லஷ்மி குபேர பூஜை செய்து சகல செல்வங்களை பெறுவோம். நாட்டில் மழை வளத்தை பெருக்கச் செய்யவும் லஷ்மி குபேர பூஜை நல்லது. லட்சுமி-குபேர பூஜைக்கு வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம்
நைவேத்தியம் செய்யும் போது கடினமான பதார்த்தங்களை நைவேத்யம் செய்யாமல் மாவுப்பொருட்களைத் தயாரித்து நைவேத்தியம் செய்வது சிறந்தது

மயூரா அகிலன்

எழுதியவர் : (14-Oct-17, 7:20 pm)
பார்வை : 72

மேலே