டெங்குசாமி

அய்யா இங்க மூலிகை மருத்துவர் பெரியசாமி அய்யா வீடு எங்க இருக்குதுங்க?
😊😊😊😊😊
என்ன விசயமா வந்தீங்க?
😊😊😊😊😊😊
அய்யா மருத்துவர் அய்யா 'டெங்கொழி' -ன்னு ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்கிருக்கிறாம். அத ஒருவேளை மோரில் கலக்கிக் குடிச்சா அரை மணி நேரத்தில நம்ம குருதில கலந்திடுமாம். அந்த மருந்தின் தாக்கம் ஒரு வருசம் குடிச்சவரோட ஒடம்பில ஒரு வருசம் இருக்குமாம். எந்த கொசு அந்த நபரை கடிக்க முயற்சி பண்ணினாக்கூட அவர் உடம்பில எந்தக் கொசு அமர்ந்தாலும் கொசுவால தாங்க முடியாத வாசம் வருமாம். அந்த வாசத்தைத் தாங்க முடியுமா அந்த கொசு பத்து வினாடிகளில் துடிதுடித்து செத்துப் போயிடுது..அவர் டெங்கொழி மருந்தால மூணு லட்சம் மக்கள் வாழும் நகரத்தில ஒருத்தருக்குக்கூட டெங்குக் காய்ச்சல் வரவில்லையாம்.
அய்யா அதைத் தொலைக் காட்சிச் செய்தில கேட்டும் நாளிதள்களிலும் படிச்சும் தெரிஞ்சிட்டுதான் உங்க ஊருக்கு வந்தேனுங்க. அவர எங்க மாயனூர் நகரத்துக்கு அழைச்சிட்டு போகணுமுங்க.நான் தாணுங்க எங்க நகரசபையின் தலைவருங்க. ஆமாம் அவுருக்கு ஏதோ பாராட்டு விழா நடந்துச்சாமே.
😊😊😊😊😊

பல லட்சம் கொசுக்களை டெங்கோழியால் கொன்ற மருத்துவர்
பெரியசாமி மருத்துவர் அய்யா அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு திரை இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தலைமை தாங்கி மருத்துவர் பெரியசாமி அய்யாவுக்கு நகர மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நம்ம மருத்துவர் அய்யாவுக்கு 'டெங்குசாமி' -ங்கற பட்டத்தை வழங்கினார்.
😊😊😊😊😊
சரிங்க அய்யா நான் இப்பவே அவரப் பாக்கப் போறனுங்க.

எழுதியவர் : மலர் (17-Oct-17, 1:09 am)
பார்வை : 354

சிறந்த நகைச்சுவைகள்

மேலே