நகைச்சுவை -சட்டம்,போலீஸ்

ஒரு போக்குவரத்து காவலர் மற்றும்
இரு சக்கர வாகன ஒட்டி இடையே
வாக்குவாதம்

காவலர் ..............: (கையைக் காட்டி வேகமாய் சென்ற
ஒரு இரு சக்கர வாகன ஓட்டையை நிறுத்துகிறார் )
ஏன் யா , நீங்கள்லாம் படித்தவர்கள் தானே இப்படி
விதி மீறல்கள் செய்யலாமா .................... ஒன்னு ,
ஹெல்மெட் இல்லாமற் ஓட்டினது, ரெண்டு ஓட்டும்போது
மொபைல் ல பேசிக்கொண்டே போனது, மூணு வேக
அத்து மீறல்..........................என்ன சொல்லற இது ஒவ்வொன்றும்
தனியா போட்டு புக் பண்ணட்டுமா இல்லே நீ பண்ணது தப்புனு
சொல்லிட்டு ஒப்புக்கொ, ஹெல்மெட் இல்லேனு ஒரு
கம்பளைண்ட் போட்டு .............................. உட்டுடறேன்
எது அய்யாக்கு வசதி ...........................

(ஆசாமியை மேலும் கீழும் ஒரு தோரணைல பார்க்க)

ஆசாமி : நான் செய்ட்து எல்லாம் தவறு ஒதுக்குறேன்
எல்லாம் போட்டே புக் பண்ணுங்க........ செய்த தவறுக்கு
அபராதம் கட்டிவிடுகிறேன் ............................ஆனா அதுக்கு
முன்ன உங்கள ஒன்னு கேக்க விரும்புகிறேன் ...................
என்ன நீங்க நிறுத்தினதுக்கு முன்னே ஒரு பல்லவன்
பஸ் ரெட் சிக்னல் ல வேகமா போச்ச்சே, அதை ஏன்
கண்டுக்கல நீங்க.............................
ரெண்டாவது நீங்களே ஹெல்மெட் இல்லமா வேகமா
போறதை நானே பலமுறை பார்த்திருக்கேன் ...................
இது என்ன நியாயம் ?

காவலர் : (இப்போ மரியாதை மாறுது) டேய்............... பேசாம அபராதம்
கட்டிட்டு பொறையா இல்ல வேற சட்டத்துல புக் பண்ணட்டுமா

ஹும்.................ஹும்........... போலீஸ் கிட்டேயியே எதித்து
பேசரையா .....................முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்

ஆசாமி : சட்டம் இப்படி அத்துமீறினா அதுக்கு யாருங்க
அபராதம் போடுவாங்கா ..............யோசிச்சு சொல்லுங்க
இப்ப என்ன விடுங்க நான் சட்டம் மதிக்கிறவன்
போட்ட அபராதம் கட்டிட்டு போறேன் .....பயத்தில் அல்ல
ஒரு சட்டத்தை மதிக்கிறவனா ..........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Oct-17, 4:26 pm)
பார்வை : 388

சிறந்த நகைச்சுவைகள்

மேலே